வாறே வா! சூப்பர் அம்சத்துடன் கலமிறங்கும் Xiaomi 15.. விலை எவ்வளவு தெரியுமா?
சியோமி நிறுவனம் வெண்ணிலா (Vanilla) மற்றும் ப்ரோ (Pro) என்ற இரண்டு Xiaomi 15 ஸ்மார்ட்போன்களை கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சமீப காலமாகவே இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சியோமி பிராண்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதற்கு சியோமி ஸ்மார்ட்போன் சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலைக்கு கிடைப்பதே முக்கிய காரணம். இந்த நிலையில், சியோமி நிறுவனம் வெண்ணிலா (Vanilla) மற்றும் ப்ரோ (Pro) என்ற இரண்டு Xiaomi 15 ஸ்மார்ட்போன்களை கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து கடந்த வருடத்தை போலவே Xiaomi 15 சீரிஸ் இந்தியாவில் வருகின்ற ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கலமிறங்க உள்ள Xiaomi 15 ஸ்மார்ட்போனில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன, பட்ஜெட் விலையில் இருக்குமா என்பதை தெரிந்துக் கொள்வோம்.
Xiaomi 15 இன் சிறப்பம்சங்கள்:
Xiaomi 15 ஆனது 120Hz ரெஃப்ரஸ் ரேட்டுடன் 6.36-இன்ச் LTPO OLED டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 2670 x 1200 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 3,200 nits வரையிலான பீக் பிரைட்னஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Octa-core Snapdragon 8 Elite சிப்செட் மூலம் இயக்கப்படும் Xiaomi 15 ஆனது 12ஜிபி அல்லது 16ஜிபி ரேம் விருப்பங்களுடன் வருகிறது.
ஆண்ட்ராய்டு 15ஐ அடிப்படையாக கொண்டுள்ள Xiomi 15 HyperOS 2.0 மூலம் இயங்குவதோடு, 1 டிபி வரை ஸ்டோரேஜ் வசதியையும் கொண்டிருக்கிறது. மேலும், 50-வாட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 90-வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. பேட்டரியை பொருத்தவரையில், 5400mAh பேட்டரி கொடுப்பட்டுள்ளது.
கேமராக்களைப் பொறுத்த வரையில், பின்புறத்தில் 50-மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ் கொண்ட மூன்று கேமரா உள்ளது. மேலும், செல்ஃபிக்களுக்கு 32 மெகாபிக்சல் சென்சார் கொண்ட ஒற்றை முன் கேமரா உள்ளது.
இது, நானோ சிம் கார்டுகளை கொண்ட டியூல் சிம் மொபைல் ஆகும். இதுவரை, அசகுசா கிரீன், பிரைட் சில்வர் எடிஷன், கருப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய ஐந்து நிறங்களில் வெளியிடப்பட்டது. மேலும், Xiaomi 15 இல் Wi-Fi 7, GPS, Bluetooth v5.40, NFC, Infrared மற்றும் USB Type-C ஆகிய இணைப்பு விருப்பங்கள் இடம்பெற்றுள்ளன.
Xiaomi 15 இன் விலை எவ்வளவு?
சென்ற வருடம், Xiaomi 14 ஸ்மார்ட்போன் சீனாவில் ரூ.46,600 (CNY 3999) என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவே இந்த மாடல் இந்தியாவில் ரூ.69,999 ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், Xiaomi 15 ஆனது ரூ.52,443 (CNY 4,499) க்கு அறிமுகமாகியுள்ளது. இந்த விலையில் இருந்து பார்க்கும்போது, இந்தியாவில் ரூ.79,999 ஆரம்ப விலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், கலர், ஸ்டோரேஜ் மற்றும் ரேம் ஆப்ஷனை பொறுத்து விலை மாறுபடலாம்.
What's Your Reaction?