10 ஆண்டுகளாக குழந்தை இல்லை.. பிறந்த 45 நாட்களில் கடத்தல்.. சென்னையில் பரபரப்பு
பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல் சம்பவத்தில் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ள நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ், நிஷாந்த்தி(31) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லமால் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் நேற்று ஆரோக்கியதாஸ் வீட்டிற்கு வந்த ஒரு பெண் அரசு திட்டங்கள் குழந்தைக்கு உள்ளது அதை நான் வாங்கி தருகிறேன் என்று கூறி சென்னை தியாகராய நகர் பகுதிக்கு ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் தியாகராய நகருக்கு சென்ற நிலையில் அங்கு குழந்தைக்கு பால் பாக்கெட், பிஸ்கெட் வாங்கிட்டு வா என குழந்தையின் தாய் நிஷாந்தியிடம் ரூபாய் 100 கொடுத்து அனுப்பியுள்ளார் அந்த அடையாளம் தெரியாத பெண். கடைக்கு சென்ற நிஷாந்த்தி திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையும், அந்த பெண்ணும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் தியாகராய நகரில் பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில் அவர்கள் வசித்து வந்த சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தயாளிடம் புகார் குழந்தை கடத்தப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கண்ணகி நகர் போலிசார் குழந்தையை ஆட்டோ வில் கடத்தி சென்ற வழியிங்கும் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
நேற்று மதியம் சுமார் 1.10 மணி அளவில் பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பெண் தனது முகத்தை துப்பட்டாவால் மறைத்தபடி செல்வதும், அவர் பின்னால் குழந்தையின் தாய் குழந்தையை தூக்கிக் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது வீட்டிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டார் துரம் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. தொடர்ந்து குழந்தையை கடத்தி சென்றவர்கள் யார் எண்பது குறித்து 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். பிறந்து 45 நாட்களான ஆண் குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
What's Your Reaction?