Budget 2025: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிப்பு... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

தனிநபர் வருமான வரி 7 லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக, பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Feb 1, 2025 - 13:10
Feb 1, 2025 - 13:18
 0
Budget 2025: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிப்பு... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2025 - 2026ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும், 8வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்ஜெட் உரையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதன்படி வருமான வரி உச்ச வரம்பானது, 7 லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த வரிச்சலுகை மூலம் நேரடி வரி வருவாயில் 1 லட்சம் கோடி ரூபாய் வரையும், மறைமுக வரி வருவாய் ₹2,600 கோடியும் இழப்பு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

4 லட்சம் ரூபாய் வரை வரி இல்லை எனவும், 4 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை 5 சதவீதம் வரி விதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், 12 லட்சம் முதல் 16 லட்சம் ரூபாய் வரை, 15 சதவீதம் வரி விதிக்கப்படுவதாகவும், 16 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை, 20 சதவீதம் வரி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 லட்சம் முதல் 24 லட்சம் ரூபாய் வரை, 25 சதவீதம் வரி என குறிப்பிடப்பட்டுள்ளதோடு, 24 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி எனவும் கூறப்பட்டுள்ளது.  

அதேபோல், மூத்த குடிமக்களுக்காக வருமான வரி பிடித்த உச்சவரம்பு, 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 1 லட்சமாக உயர்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வருமான வரி மசோதா, அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்தப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் விதமாக, புதிய வருமான வரி சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்; புதிய சட்ட மசோதாவில், பழைய சட்டத்தின் 50% விதிகள் பட்ஜெட்டில் இருக்கும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய, கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டித்தும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் (TDS) பிடித்தத்துக்கான வருடாந்திர வரம்பு, 6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தனிநபர் வருமான வரி, 7 லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள அறிவிப்பு, நடுத்தரவர்க்கம் எனப்படும் மிடில் கிளாஸ் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow