Budget 2025: மத்திய பட்ஜெட் தாக்கல்... கும்பமேளா உயிரிழப்பு... எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
Budget 2025: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தன.
![Budget 2025: மத்திய பட்ஜெட் தாக்கல்... கும்பமேளா உயிரிழப்பு... எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு](https://kumudamnews.com/uploads/images/202502/image_870x_679dc90f2017e.jpg)
Budget 2025: 2025 - 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியதும், மக்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பிபடி, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட முயன்றனர். பிரக்யாராஜ் மஹா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் காரணமாக 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். எனவே அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால், எதிர்க் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இந்தத் தொடர் அமளிக்கிடையே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கினார். இதனால், ஒரு கட்டத்தில் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும்விதமாக, காங்கிரஸ், சமாஜ்வாதி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)