நாக்கை அடக்க வேண்டும்... சீமான் மனநிலையை சோதிக்க வேண்டும்.. அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்...!

Minister Geetha Jeevan About Seeman : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும் என்றும் அரசியலில் அரைவேக்காடு தனமாக பேசக்கூடாது என்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Jul 12, 2024 - 17:22
Jul 13, 2024 - 10:20
 0
நாக்கை அடக்க வேண்டும்... சீமான் மனநிலையை சோதிக்க வேண்டும்.. அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்...!
சீமான் மற்றும் அமைச்சர் கீதா ஜீவன்

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும் என்றும் அரசியலில் அரைவேக்காடு தனமாக பேசக்கூடாது என்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Minister Geetha Jeevan About Seeman : தூத்துக்குடி மாவட்டம் டூவிபுரத்தில் அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகத்தில் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாம் தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் சீமான் கலைஞரை பற்றி இழிவாகவும், அவதூராகவும் பேசியதை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக தமிழக மக்களின் வளர்ச்சிக்காக, தமிழ் மொழி வளர்ச்சிக்காக கலைஞர் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்தவர்.. மாற்றுத்திறனாளி, திருநங்கைகள், மகளிர், தொழிலாளர்கள் என அனைவர் வாழ்க்கையிலும் உரிமையை நிலைநாட்டியவர் கலைஞர் கருணாநிதி.

எங்கள் தலைவர் பொறுப்பான ஒரு முதலமைச்சராக இருக்கிறார். எங்கள் முதலமைச்சரின் கண் அசைவுக்கேற்ப எங்கள் கட்சி தொண்டர்கள் செயல்படுவார்கள். அவரின் கண் அசைவுக்காக காத்திருக்கிறார்கள், பொறுமையாக இருக்கிறார்கள். ஆளுங்கட்சியில் இருப்பதால், பொறுமையாக இருக்கிறோம்.

ஒரு தலைவனுக்குரிய பண்புகள் இல்லாத, தொண்டர்களை வழிநடத்த தெரியாதவர் சீமான். தான் சொல்வதை மாற்றி, மாற்றிச் சொல்லி வருகிறார் சீமான். சீமானின் மனநிலையை சோதிப்பது நல்லது என்பது எனது கருத்து.

சவுக்கு சங்கரையும், ஃபெலிக்ஸையும் கைது செய்வீர்களா என்று சீமான் கேட்கிறார். பெண் காவலர்களையும், உயர் அதிகாரிகளின் தவறான முறையில் பேசுகின்றார் ஒருவர். இதற்கு பெண் காவலர்கள் புகார் கொடுத்து இருக்கின்றார். அதற்கு வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது. பெண் காவலர்களை தவறாக சொன்னவர்களை இவர் ஏற்றுக்கொள்கின்றாரா?

கருத்துரிமை பறிக்கப்படுவதாக அவர் கூறுகிறார். தனிப்பட்ட முறையில் தவறான சொற்களை உபயோகப்படுத்தி பேசி பிரச்னை உண்டாகி, சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகின்றார். இது ஏற்கத்தக்கதல்ல, எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பான முதல்வராக, கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்தி, கட்டுப்பாட்டோடு திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கின்றார்.

சீமான் அவருடைய கட்சிக்கு இலங்கை தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி உலக அளவில் பல்வேறு வகையில் நன்கொடையாக பெற்று வருகின்றார்.. இலங்கையில் எப்படி ராஜபக்சேயை  எதிர்க்கின்றனரோ, அதே போன்று தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்க வேண்டும் என்று காட்டி கொள்வதற்காக திமுகவையும், திமுக தலைவர்களையும் அவதூறாக அவர் பேசி வருகின்றார்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும். அரசியலில் அரைவேக்காடு தனமாக பேசக்கூடாது. அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒரு தலைவராக அவர் தெரிகின்றார். தமிழ் சமூகத்தை தவறான தகவல் மூலம் தவறாக வழிநடத்தி வருகின்றார் என்பதை கூறிக் கொள்கின்றேன்.

குற்றச் செயல்கள் இன்று நேற்று அல்ல; தொடர்ச்சியாக நடைபெற்று வருவது தான். 1967க்கு முன்னர் இருந்து குற்றச்செயல்கள் நடந்து தான் வருகிறது. தொடர்ச்சியாக நடக்கிறது.. கலைஞர் பொறுப்பேற்ற பின்னர் தான் சட்டம், ஒழுங்கு சரி இல்லை என்று கூறி தவறான கருத்துக்களை கூறுகின்றார்கள்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow