இலங்கை அதிபர் தேர்தலில் ட்விஸ்ட்.. இடதுசாரி கட்சி தலைவர்தொடர்ந்து முன்னிலை

இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவரான அனுர குமார திசநாயக முன்னிலை வகித்து வருகிறார்.

Sep 22, 2024 - 12:48
Sep 22, 2024 - 13:35
 0
இலங்கை அதிபர் தேர்தலில் ட்விஸ்ட்.. இடதுசாரி கட்சி தலைவர்தொடர்ந்து முன்னிலை
இலங்கை அதிபர் தேர்தல்: அனுர குமார திசநாயக முன்னிலை

இலங்கையின் 9-ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் நேற்று [செப்.21] சனிக்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சரிவுக்கு பின் இத்தேர்தல் நடைபெறுவதால் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதன் எதிரொலியாக அதிபர் பதவியை ராஜினாமா செய்த கேத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறினார்.

தேர்தலில் வாக்களிக்க 1 கோடியே 71 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். ரணில் விக்ரமசிங்க, நமல் ராஜபக்ச, அனுர குமார திசநாயக உள்ளிட்ட 38 பேர் போட்டியாளர்களாக களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வாக்குப்பதிவில் கலந்துகொண்டனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணப்படும் என்றும், இன்று [ஞாயிற்றுக்கிழமை] பிற்பகலுக்குள் புதிய ஜனாதிபதி யார் என தெரியவரும் என கூறப்படுகிறது.

இலங்கையில் தற்போது நடக்கும் ஜனாதிபதி தேர்தல் முற்றிலும் வேறுபட்ட ஒரு இயல்பைக் கொண்ட தேர்தலாக பார்க்கப்படுகிறது. 20 ஆண்டுகால வரலாற்றில் வெளிப்படையாக இனவாதம் பேசப்படாமல் நடத்தப்படும் தேர்தல் என்று இதனைக் கூறலாம். தமிழ் பிரிவினை வாதம், தமிழர் இனவாதம், இஸ்லாமிய தீவிரவாதம் என வெளிப்படையாக பேசாமல் நடத்தப்படும் முதல் தேர்தல் இதுவென்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி இடதுசாரி கட்சியான, தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுர குமார திசநாயக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இலங்கையின் வரலாற்றில், அதிகாரத்திற்கு வரும் முதல் மார்க்சிய தலைவராக திசநாயக என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது இடத்துக்கு தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதேச இடையே போட்டி உருவாகி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow