மீண்டும் அணு ஆயுதப் போர்? கேள்விக்குறியாகும் எதிர்காலம்..!

மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கான அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த போர் அணு ஆயுதப் போராக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உலக அரசியல் வல்லுநர்கள் பகீர் கிளப்புகின்றனர். அணு ஆயுதத்தை உலக நாடுகள் தேர்வு செய்வது ஏன்? இந்த அணு ஆயுதப் போரால் என்ன நடக்கும்? என்பன குறித்து விரிவாக பார்ப்போம்.

Mar 4, 2025 - 15:29
Mar 4, 2025 - 17:33
 0
மீண்டும் அணு ஆயுதப் போர்? கேள்விக்குறியாகும் எதிர்காலம்..!
மீண்டும் அணு ஆயுதப் போர்? கேள்விக்குறியாகும் எதிர்காலம்..!

உலகம் முழுவதும் தற்போது பெரும் பீதியை கிளப்பியுள்ளது மூன்றாம் உலகப் போர் குறித்தான செய்திகள். இரண்டு உலகப் போர்களை கண்ட இந்த உலகம், மூன்றாம் உலகப்போரை சந்திப்பதற்கு தயாராக இல்லை என்பதே நிதர்சனம். காரணம், முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் தந்த தாக்கங்கள். குறிப்பாக இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட அணு ஆயுதம், உலக மக்களின் அணுக்களை இன்றளவும் அசைத்துப் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றது. 

முதல் உலகப்போர்...  உலகின் பெரும்பாலான நாடுகளை ஈர்த்த மிகப்பெரிய போர் ஆகும். இது ஐரோப்பாவில் ஆரம்பமான போதும், உலகின் பல பகுதிகளில் பரவி, முக்கியமான அச்சுறுத்தல்களையும் மாற்றங்களையும் உருவாக்கியது. இந்த போர் என்பது, 1914 இல் ஆஸ்திரியா-ஹங்கேரி தலைவரான Archduke Franz Ferdinand –ன் கொலைக்கு பிறகு ஆரம்பானது. ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகள் முழுவதும் இதில் ஈடுபட்டன. 

முதலாம் உலகப்போரில், பிரிட்டனின் Lee Enfield Rifle, ஜெர்மனியின் Mauser Rifle, அமெரிக்காவின் Springfield Rifle, என ரைஃபில்ஸ் மற்றும் கைத் துப்பாக்கிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. அதோடு, ஜெர்மனி Maxim Gun, பிரிட்டன் Vickers Gun போன்ற Machine Gun-கள் பயன்படுத்திய நிலையில், Chlorine Gas, Mustard Gas, Phosgene போன்ற Chemical ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன. 

மேலும், Bren Gun Carrier, Mark I போன்ற ஆயுதங்களை பிரிட்டன் பயன்படுத்திய நிலையில், Fokker Eindecker மற்றும் Sopwith Camel போன்ற விமானத் தாக்குதல்களும் நடந்தேறின. ஜெர்மனியின் U-Boats போன்றவை பயன்படுத்தப்பட்டபோது, Dreadnought போன்ற போர்க் கப்பல்களும் முதலாம் உலகப்போரில் முக்கியப் பங்கு வகித்தன. 

முதலாம் உலகப் போர் பல சந்தர்ப்பங்களில் மாறியிருந்தாலும், 1918 இல் அதன் முடிவுக்குப் பிறகு ஒரு புதிய உலகளாவிய அரசியல் அமைப்பு உருவாகியது. Treaty of Versailles என்று அழைக்கப்படுகின்ற பேராக் அமைதி ஒப்பந்தமானது போரை முடித்திருந்தாலும், அது அடுத்த உலகப் போருக்கான காரணங்களை உருவாக்கியது என்று சொன்னால் அது மிகையாகாது. 

ஆம், முதல் உலகப்போர் உண்மையில் இரண்டாம் உலகப்போருக்கு வழி வகுத்தது. இந்த முதல் உலகப்போரை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பேராக் அமைதி ஒப்பந்தமானது, ஐரோப்பாவில் பெரும்பாலும் பொருளாதார நெருக்கடிகள் உருவாக காரணியாக இருந்ததோடு, ஜெர்மனியில் நாஜிக்களின் ஆட்சிக்கு வித்திட்டது. முதலாம் உலகப் போருக்கு பின்னர், ஜெர்மனி தங்கள் இழப்புகளைத் திரும்பப் பெறுவதற்கும், சமுதாயத்தின் நிலையை மேம்படுத்துவதற்குமான முயற்சிகளில் இறங்கியது. இது ஹிட்லரின் நாசிசக் கொள்கைகள் மற்றும் நவீன இராணுவம் உருவாக்கத்தை தூண்டியது. இது இரண்டாம் உலகப்போரின் முக்கியமான காரணமாக பிற்காலத்தில் அமைந்தது. இந்த போரில், முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் அட்வான்ஸ் டெக்னாலிஜிகள் உபயோகிக்கப்பட்டிருந்தாலும்,  வரலாற்றில் ஆறாத வடுவை ஏற்படுத்தின அணு ஆயுதங்கள்.. 

அணு ஆயுதம் பற்றிய ஆராய்ச்சியையும் அதன் உருவாக்கத்தையும் Manhattan Project என்ற பெயரில் அமெரிக்கா 1942–1945 கால கட்டத்தில் ஆரம்பித்தது. இந்த திட்டம், பிரபல அறிவியலாளர்களான ராபர்ட் ஓப் எனரிகு, ஜூலியஸ் ரோபர்ட் ஒபென்ஹெய்மர் மற்றும் பலரின் தலைமையில் அணு பொருளை பிரிதல் செய்வதற்கான திறனை அமெரிக்கா கண்டுபிடித்தது. 

அமெரிக்கா கண்டுபிடித்த இந்த அணு ஆயுதத்தால் எவ்வளவு பெரிய தாக்கம் ஏற்படும் என்பதை 1945 ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 9 அன்று இவ்வுலகம் உணர்ந்தது. போர்க்களத்தில் முதல் முறையாக அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது அப்போது தான். அந்தசமயம் ஜெர்மனி ஐரோப்பியாவிடம் சரணடைந்து இருந்தது. இரண்டாம் உலகப்போரில் நேச நாட்டுப் படைகள் ஜப்பானுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. 

1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 08:15 மணியளவில் ஜப்பான் மக்கள் எதிர்பாராத சமயத்தில், அமெரிக்கா எந்தவொரு எச்சரிக்கை அறிவிப்பும் விடுக்காமல், ஹிரோஷிமாவில் லிட்டில் பாய் (Little Boy) என்ற முதல் அணுகுண்டை போட்டது. குண்டு விழுந்த வினாடியில் சுமார் 500 மீட்டர் சுற்றளவில் இருந்த மக்கள் அனைவரும் கனப் பொழுதில் புகையோடு புகையாக காணாமல் போனார்கள்.

சுமார் 15,000 டன் டிரைனிட்ரோடோலூயினுக்கு (TNT) சமமான ஆற்றல் வெளியான இந்தப் பேரழிவு தாக்குதலில் 70,000 முதல் 80,000 பேர் நொடிப் பொழுதில் கொல்லப்பட்டனர். மேலும், அணுகுண்டு வீசப்பட்ட 1.6 கிலோமீட்டர் சுற்றளவில் சுமார் 62,000 கட்டடங்கள் தரைமட்டமாகின. உலகுக்கே இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த மூன்றாவது நாளே அதாவது 1945 ஆகஸ்ட் 9 ஆம் தேதி, இன்னொரு அதிர்ச்சியைத் தரும் வகையில் நாகசாகியில் ஃபேட் மேன் (Fat Man) என்ற பெயரில் இரண்டாவது அணுகுண்டை வீசியது அமெரிக்கா.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் ஜப்பான் வேறு வழியில்லாமல், நேச நாடுகள் அணியிடம் சரணடையவே, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. ஆனால், அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்பு, கதிர்வீச்சு பாதிப்பு ஆகியவற்றால் அந்த ஆண்டின் இறுதியில் பலி எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்து 40,000-ஆக அதிகரித்தது. குறிப்பாக, அந்த அணுகுண்டு தாக்குதலின் கதிர்வீச்சு பாதிப்புக்குள்ளானவர்களின் சந்ததியினர் தலைமுறை தலைமுறையாக உயிரியல் குறைபாட்டுடன் பிறந்து வருகின்றனர். 

இந்த நிலையில், மூன்றாம் உலகப் போரானது அணு ஆயுதப் போராக விரிவடையும் என்று கூறப்படுவதால், உலக மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த அணு ஆயுத போரின் விளைவுகள், சம்பந்தப்பட்ட நாடுகளுக்கும், ஒட்டுமொத்த பூமிக்கும் பேரழிவை உண்டாக்குவதோடு, கற்பனை செய்து பார்க்க முடியாத பேரழிவை ஏற்படுத்தும். உடனடி உயிர் இழப்பு மட்டுமல்ல, நீண்ட கால சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், பொருளாதாரம் மற்றும் சமூக பாதிப்புகளிலும் கூட இந்த பேரழிவு ஏற்படும். 

அணு ஆயுதப் போர் என்பது உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேரழிவை உண்டாக்கும் என்றாலும், சில நாடுகள் அதன் நேரடி தாக்கத்திலிருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் அணு ஆயுத போரின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம், அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற அணு ஆயுத போரை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ள நாடுகளில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வலுவான கூட்டணிகளைக் கொண்ட நடுநிலை நாடுகள் அல்லது மோதல் பகுதிகளிலிருந்து விலகி இருக்கும் நாடுகள் ஓரளவு பாதுகாப்பைக் கொண்டிருக்கலாம். நேரடி அணு ஆயுதத் தாக்குதல்களைத் தவிர்க்கும் நாடுகள் கூட மறைமுக விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. 

இத்தகையச் சூழலில் தான், அணு ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உலகில் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்த மற்றும் பரவலுக்கு தடுப்பு ஏற்படுத்த உதவுகின்றன. மூன்றாம் உலகப்போரின் அணு ஆயுத போராக உருவெடுப்பது உலகத்திற்கு மிகப்பெரிய அபாயமாக இருக்கின்றது. எனவே, அதனைத் தவிர்க்குவதற்கான சர்வதேச முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow