புது சிக்கலில் ராஷ்மிகா கொதிக்கும் காங். எம்.எல்.ஏ. கன்னடத்தை அவமதித்தாரா?

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு எதிராக கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொந்தளித்துள்ளது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரையும் வெறுப்பேற்றும் வகையில் அப்படி சென்ன செய்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா...... பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

Mar 4, 2025 - 15:29
Mar 5, 2025 - 12:23
 0
புது சிக்கலில் ராஷ்மிகா கொதிக்கும் காங். எம்.எல்.ஏ. கன்னடத்தை அவமதித்தாரா?
புது சிக்கலில் ராஷ்மிகா கொதிக்கும் காங். எம்.எல்.ஏ. கன்னடத்தை அவமதித்தாரா?

National Crush என ரசிகர்களால் கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனா தற்போது பான் இந்தியா திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் இருந்தாலும், கர்நாடகாவில் மட்டும் ராஷ்மிகா அதிக வெறுப்பை சம்பாதித்து வைக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். இந்த வெறுப்பை வளர்த்ததும் ராஷ்மிகா தான் என்கின்றனர் சினிமா ரசிகர்கள். 2016ம் ஆண்டில் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவுக்குள் நுழைந்தார் ராஷ்மிகா. 


தொடக்கத்தில் கன்னட மொழிப் படங்களில் நடித்து வந்த ராஷ்மிகாவுக்கு அப்படங்கள் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தாலும் பெரிய அளவில் விளம்பரம் கிடைக்கவில்லை. இந்தநிலையில் 2018ஆம் ஆண்டு தெலுங்கில் விஜய தேவரகொண்டா உடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைபப்டம் சூப்பர் ஹிட் அடிக்கவே தேசிய அளவில் பிரபலமானார் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர்ந்தார். தமிழில் கார்த்தி படத்தில் அறிமுகம் ஆனாலும், விஜய் உடன் இணைந்து நடித்த வாரிசு திரைபப்டம் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களையும் கொள்ளையடித்தார். 

அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடித்த புஷ்பா The Raise மூலம் பான் இண்டியா சினிமாவில் எண்ட்ரி கொடுத்த ராஷ்மிகாவின் கேரியர் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்த அனிமல், அதனை தொடர்ந்து வெளியான புஷ்பா The Rule மற்றும் சவ்வா திரைபப்டங்கள் வசூல் ரீதியில் மிகெப்பரிய வெற்றி பெற்றதால் உற்சாகத்தில் மூழ்கியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.....

இந்தநிலையில் தான், ராஷ்மிகா மந்தனாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்களே கொந்தளித்து இருப்பது கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகாவில் பிறந்து, அங்கேயே வளர்ந்து, கன்னட சினிமா மூலம் பயணத்தை தொடங்கிய ராஷ்மிகா மந்தனா, பல மேடைகளில் தான் ஐதராபாத்தை சேர்ந்தவர் என பேசியுள்ளார். இதனால்  கர்நாகடாவில் பிறந்த இவர், தான் எங்கிருந்து தனது பயணத்தை தொடங்கினோம் என்பதை  மறந்துவிட்டார் என கூறி கன்னட ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். 

ராஷ்மிகா மந்தனாவை சினிமாவில் அறிமுகம் செய்தவர் அவரின் முதல் படமான கிரிக் பார்ட்டியை இயக்கிய ரிஷப் ஷெட்டி. ஆனால் ரிஷப் ஷெட்டியே இயக்கி அவரே கதாநாயகனாக நடித்த காந்தாரா திரைப்படம் இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற பொழுது, ராஷ்மிகா ஒரு வாழ்த்து கூட சொல்லாதது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் ராஷ்மிகா சிக்கியுள்ளார். அதாவது கர்நாடகாவில் 16வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவை அம்மாநில அரசு நடத்தி வருகிறது. மார்ச் 1ம் தேதி தொடங்கிய இந்த விழா மார்ச் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா உட்பட பல கன்னட திரைப்பட நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்த விழாவில் ராஷ்மிகா மந்தனா மற்றும் இன்னும் பல பிரபலங்கள் பங்கேற்கவில்லை. 

இதனால் கோபமடைந்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், சர்வதேச திரைப்பட விழாவில் பலர் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது. இது யாருடைய தனிப்பட்ட நிகழ்ச்சியும் அல்ல. இது சினிமா துறையை சார்ந்த நிகழ்ச்சி. இதில் நடிகர்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பங்கேற்கவில்லை என்றால் யார் பங்கேற்பார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள். அரசின் உதவியும், அனுமதியும் இல்லாமல் திரைப்படங்களை எடுக்கமுடியாது. எங்கு எப்படி என்ன செய்யவேண்டும் என எனக்கு தெரியும். அப்போது பார்த்துக்கொள்கிறேன்”   என கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து, மாண்டியா சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவி கவுடா கனிகா, ராஷ்மிகாவுக்கு எதிராக கொந்தளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க ராஷ்மிகாவுக்கு 10 முறைக்கு மேல் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறினார். தனக்கு தெரிந்த ஒருவர் ராஷ்மிகாவை திரைப்பட விழாவிற்கு அழைக்க அவரது வீட்டிற்கு 10 முறை சென்றதாகவும், அப்போது ராஷ்மிகா தன்னுடைய வீடு ஐதராபாத்தில் இருப்பதாகவும், கர்நாடகா எங்கிருக்கிருக்கிறது என்றே தனக்கு தெரியாது எனவும் கூறியதாக கோபத்தை கொப்பளித்துள்ளார் எம்.எல்.ஏ. கனிகா. 

தனது சினிமா பயணத்தை கர்நாடகாவில் தொடங்கிய அவர், இந்த மாநிலத்தையும் இந்த மொழியையும் அவமதிப்பதாகவும், அவருக்கு அனைவரும் சேர்ந்து பாடம் கற்பிக்க வேண்டாமா என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கனிகா கேள்வி எழுப்பியுள்ளார்.


தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நல்ல சம்பளமும், அதிக ரசிகர்களின் அன்பும் கிடைப்பதால் கன்னட திரைத்துறையை ராஷ்மிகா புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. என்னதான் நேஷ்னல் கிரஸ் ஆக இருந்தாலும், ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பதா என்று கன்னட சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் புலம்பத் தொடங்கி இருப்பது கன்னட சினிமா உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow