Kavundampalayam: ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் ரிலீஸுக்கு மிரட்டல்… உயர்நீதிமன்றம் அதிரடி!

Actor Ranjith Movie Kavundapalayam Issue : ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் இந்த மாதம் 15ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், தொடர் மிரட்டல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Jul 31, 2024 - 17:11
Jul 31, 2024 - 18:17
 0
Kavundampalayam: ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் ரிலீஸுக்கு மிரட்டல்… உயர்நீதிமன்றம் அதிரடி!
கவுண்டம்பாளையம் படம் ரிலீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Actor Ranjith Movie Kavundapalayam Issue : 1990களில் பிஸியான நடிகராக வலம் வந்தவர் ரஞ்சித். மறுமலர்ச்சி, நட்புக்காக உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமான ரஞ்சித், நடிகை பிரியா ரமனை காதல் திருமணம் செய்தார். சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த இந்த ஜோடி, தற்போது மீண்டும் இணைந்து வாழ்ந்து வருகிறது. ரியல் லைஃபில் தங்களது காதல் புனிதமானது என நிரூபித்த ரஞ்சித், நாடக காதலை பின்னணியாக வைத்து கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கியுள்ளார். 

ஏற்கனவே கோலிவுட்டில் நாடகக் காதல் ஸ்பெஷலிஸ்ட்டாக வலம் வரும் இயக்குநர் மோகன் ஜி தான், ‘கவுண்டம்பாளையம்’ ரஞ்சித்தின் ரோல் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார், அதோடு பா ரஞ்சித், மாரி செல்வராஜ் இயக்கிய படங்களை எல்லாம் பார்த்ததே கிடையாது எனவும் ரஞ்சித் பேசியிருந்தார். பா ரஞ்சித், மாரிசெல்வராஜ் ஆகியோருக்கு பதிலடி கொடுக்க தான் கவுண்டம்பாளையம் படத்தை இயக்கியுள்ளதாக ரஞ்சித் சொன்னது இன்னும் தமாஸாக இருந்தது.

இந்நிலையில், இந்த மாதம் 15ம் தேதி வெளியாகவிருந்த கவுண்டம்பாளையம் படத்தின் ரிலீஸுக்கு கடைசி நேரத்தில் சிக்கல் எழுந்தது. அதாவது, இப்படத்தின் ட்ரெய்லரை பார்த்த ஒரு தரப்பினர், இது தவறான கருத்துகளை பரப்புவதாக தெரிவித்திருந்தனர். அதேபோல் சில கட்சிகள், அரசியல் கட்சி தலைவர்களை மையப்படுத்தி, முக்கியமாக விசிக தலைவர் திருமாவளவனை விமர்சிக்கும் விதமாக இருப்பதாக கண்டன குரல்கள் எழுந்தன. இதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த ரஞ்சித், சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தான் கவுண்டம்பாளையம் படத்தை இயக்கியுள்ளதாக கூறினார். 

ஆனாலும் கவுண்டம்பாளையம் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டர்களில் பிரச்சினை வரும் என சிலர் மிரட்டல் விடுத்துள்ளதாக ரஞ்சித் கூறியிருந்தார். இதனால் வேறு வழியே இல்லாமல் கவுண்டம்பாளையம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதுகுறித்து பேசியிருந்த ரஞ்சித், முதலமைச்சர் ஸ்டாலினையும் செய்தித்துறை அமைச்சரையும் சந்தித்து கவுண்டம்பாளையம் படத்தை வெளியிட ஆதரவு கேட்பேன் எனக் கூறியிருந்தார். அதேபோல், கோவை மாநகர காவல் ஆணையரிடமும் அவர் புகார் அளித்திருந்தார். 

கவுண்டம்பாளையம் படத்தை திரையிட்டால் கலட்டா செய்வோம் என்று பலர் தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டியதாகவும் ரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால், திரையரங்கின் பாதுகாப்பு மிக முக்கியம், நாடகக் காதலை பற்றி ஒரு நல்ல குடும்ப கதையை நான் எடுத்துள்ளதாகவும். ஆனால் சிலரின் மிரட்டலால் என்னை போன்ற எளிய கலைஞர்கள் வளர முடியாமல் போவதாகவும் பேசியிருந்தார். அதேநேரம், கவுண்டம்பாளையம் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில், தான் சாதி வெறி பிடித்தவன் தான் என ரஞ்சித் மிக வெளிப்படையாக பேசியிருந்தார். 

மேலும் படிக்க - 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்த ராயன்

இந்நிலையில், கவுண்டம்பாளையம் படத்துக்கு ஒரு பிரிவினர் மிரட்டல் விடுத்து வருவதால், பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என தயாரிப்பாளர் பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் திரைப்படம் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow