Raayan Box Office Collection : ரூ.100 கோடி வசூலித்த ராயன்… 5வது நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Raayan Tamil Movie Box Office Collection Update : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம்(Raayan Movie) கடந்த வாரம் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் வெளியாகி 5 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Jul 31, 2024 - 16:19
Jul 31, 2024 - 17:19
 0
Raayan Box Office Collection : ரூ.100 கோடி வசூலித்த ராயன்… 5வது நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
Raayan Tamil Movie Box Office Collection Update

Raayan Tamil Movie Box Office Collection Update : பவர் பாண்டியை தொடர்ந்து தனுஷ் இயக்கிய இரண்டாவது படம் ராயன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான ராயன், கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியானது. தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ராயன் தனுஷின் 50வது படம் என்பதால், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. 

அதேபோல் ரிலீஸுக்கு முன்பு ராயன் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளும் வெறித்தனமாக இருந்தன. இதனால், இந்தப் படத்துக்கு முதல் நாளிலேயே தரமான ஓபனிங் கிடைத்தது. தமிழகம் மட்டுமின்றி பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டிணம் என மற்ற மொழி ரசிகர்களும் ராயன் படத்துக்கு(Raayan) நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதன் காரணமாக முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் ராயன் படத்தின் வசூல்(Raayan Box Office) சிறப்பாக இருப்பதாக சொல்லப்பட்டது. அதன்படி வார இறுதியான முதல் மூன்று நாட்களில், 70 கோடி வசூலை கடந்துவிட்டது ராயன்.   

அதனைத் தொடர்ந்து வார நாட்களான திங்கள், செவ்வாய் கிழமைகளில் மட்டும் ராயன் படத்துக்கு பெரியளவில் ஓபனிங் இல்லை எனத் தெரிகிறது. இருப்பினும் 4வது நாளில் 85 கோடி ரூபாய் வசூலை கடந்த ராயன், 5வது நாளான நேற்று 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளதாம். இந்த தகவலின் படி ராயன் படத்தின்(Raayan Day 5 Box Office Collection) 5 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 105 கோடி ரூபாய் என Let's X OTT GLOBAL என்ற நிறுவனம் அப்டேட் கொடுத்துள்ளது. அதேநேரம் ராயன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் எந்தவிதமான அபிஸியல் அப்டேட்டையும் வெளிடவில்லை. 

மேலும் படிக்க - கோட் மூன்றாவது சிங்கிள் ரெடி

Let's X OTT GLOBAL நிறுவனத்தின் தகவல்படி, ராயன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 52 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக தெரிகிறது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் 20 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 30 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ராயன் படத்தில் வரும் வடசென்னை பகுதி முழுவதுமே செட் போட்டு அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதற்காக மட்டுமே 30 கோடி ரூபாய் பட்ஜெட் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக 50 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான ராயன்(Raayan Movie), 100 கோடி வசூலித்து படகுழுவுக்கு லாபம் கொடுத்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow