Actor Vijay Goat Movie Third Single Release Update in Tamil: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான தளபதி விஜய், தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற கோ படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் மல்டி ஸ்டார்ஸ் மூவியாக உருவாகும் தி கோட் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய்யுடன் மை மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், டான்ஸ் கிங் பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் இன்னும் பல நட்சத்திரங்களும் கோ படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்தது தான். அதேபோல் யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தி கோட், செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதனைத் தொடர்ந்து இப்படத்தில் இருந்து தரமான அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. விஜய்யின் போஸ்டர்களை தொடர்ந்து, விசில் போடு என்ற முதல் பாடல் வெளியானது. இதில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் ஆட்டம் போட்டிருந்தனர். அடுத்து விஜய், மறைந்த பவதாரிணியின் ஏஐ குரலில் கோட் படத்தின் இரண்டாவது பாடலையும் படக்குழு வெளியிட்டது. விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான சின்ன சின்ன கண்கள் என்ற இந்தப் பாடல், சூப்பரான மெலடியாக வந்துள்ளதாக ரசிகர்களும் பாராட்டியிருந்தனர்.
அதேபோல் இன்னொரு ஸ்பெஷல் அப்டேட்டான விஜய்யின் கிளிம்ப்ஸ் வீடியோவும் ரசிகர்களுக்கு செம மெர்சல் காட்டியது. இந்த வீடியோவில் தளபதி விஜய் டபுள் ஆக்ஷனில் வெறித்தனமாக ஆக்ஷன் ட்ரீட் கொடுத்திருந்தார். இதனையடுத்து கோட் படத்தின் அடுத்த அப்டேட் என்னவாக இருக்கும், எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். படம் வெளியாக இன்னும் 36 நாட்களே இருப்பதால், இனி கோட் படத்தில் இருந்து அப்டேட் மழை கன்ஃபார்ம் என ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களின் காத்திருப்புக்கு தற்போது அதிரி புதிரியாக ஒரு பலன் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க - விஷால் - லைகா பஞ்சாயத்து ஓவர்
அதாவது, விஜய்யின் கோட் படத்தின் புதிய அப்டேட்டை, இயக்குநர் வெங்கட் பிரபுவே அபிஸியலாக வெளியிட்டுள்ளார். அதன்படி கோட் மூன்றாவது சிங்கிள் விரைவில் வெளியாகும் என ட்வீட் செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆனால், அப்டேட் எப்போது என்பதையோ அல்லது பாடலின் ரிலீஸ் தேதியையோ வெங்கட் பிரபு குறிப்பிடவில்லை. முன்னதாக ஆகஸ்ட் 1ம் தேதி கோட் மூன்றாவது சிங்கிள் வெளியாகும் என அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால், நாளை மறுநாள் (ஆக.1) கோட் படத்தின் மூன்றாவது சிங்கிள் பற்றிய அப்டேட் வெளியாகும் எனத் தெரிகிறது.
Next update #Goat3rdSingle
— venkat prabhu (@vp_offl) July 30, 2024
கோட் மூன்றாவது சிங்கிள், விஜய்யின் இன்ட்ரோ சாங்-ஆக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. யுவன் ஸ்டைலில் குத்துப் பாடலாக உருவாகியுள்ள இதன் லிரிக்கலை கங்கை அமரன் எழுதியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல், கோட் மூன்றாவது சிங்கிளில் விஜய்யுடன் த்ரிஷா டான்ஸ் ஆடியிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோட் முதல் பாடலில் யுவனின் இசை மீது விமர்சனம் எழுந்திருந்தது. இதற்கெல்லாம் கோட் மூன்றாவது சிங்கிளில் யுவன் பதிலடி கொடுப்பாரா என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.