Vishal: லைகா நிறுவனத்துக்கு எதிராக விஷால் வழக்கு... பஞ்சாயத்து ஓவர்... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
Actor Vishal Case Against LYCA Productions : லைகா நிறுவனத்துக்கு எதிராக நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Actor Vishal Case Against LYCA Productions : கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம் வரும் விஷாலுக்கும் லைகா தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையேயான பஞ்சாயத்து பல நாட்களாக நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. லைகா நிறுவனம் மீது விஷால் தாக்கல் செய்திருந்த வழக்கில், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை தனக்கு செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என, விஷால் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சண்டக்கோழி 2 படத்தின் தமிழ், தெலுங்கு, திரையரங்க, சாட்டிலைட் வெளியீடு உரிமைக்காக, லைகா நிறுவனத்துடன் கடந்த 2018ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி சண்டக்கோழி 2ம் பாகம் வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயை தான் செலுத்தி உள்ளதாக விஷால்(Vishal) தன் மனுவில் கூறியுள்ளார். மேலும் லைகா நிறுவனம்(Lyca Productions) ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால், அதன் தயாரிப்பாளர் நிறுவனத்தை மூடிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்கும் வாய்ப்புள்ளது. எனவே தான் செலுத்திய ஜிஎஸ்டி தொகையையும் அபராதத் தொகையையும் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என கோரியிருந்தார். அதன்படி, 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த, லைகா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க - அசுர வேகத்தில் தக் லைஃப்
இந்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பக்கோரி லைகா நிறுவனம்(Lyca Productions) சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பிலும் சமரசம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் விஷால்(Vishal vs Lyca) – லைகா இடையேயான பஞ்சாயத்து ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
விஷால்(Vishal) நடிப்பில் கடைசியாக வெளியான ரத்னம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனையடுத்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஷாலே இயக்கி நடித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கவும் விஷால் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக விஷால் நடிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்த மார்க் ஆண்டனி மட்டுமே விஷாலுக்கு சூப்பரான கம்பேக் படமாக அமைந்தது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் 100 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?