Thug Life: சிம்புவை தொடர்ந்து கமல்... அசுர வேகத்தில் தக் லைஃப்... ரிலீஸ் தேதி இதுதானா..?
Actor Kamal Haasan Thug Life Dubbing Started : மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த வாரம் டப்பிங் பணிகளை தொடங்கினார் சிம்பு. அவரைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசனும் தக் லைஃப் படத்திற்கு டப்பிங் கொடுப்பதில் பிஸியாகிவிட்டார்.
Actor Kamal Haasan Thug Life Dubbing Started : கமல்ஹாசன் நடிப்பில் இரு வாரங்களுக்கு முன்னர் வெளியான இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வியடைந்தது. இயக்குநர் ஷங்கரின் மிக மோசமான மேக்கிங் என இந்தியன் 2 படத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர் ரசிகர்கள். விக்ரம் திரைப்படம் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்திருந்த கமல்ஹாசனுக்கு, இந்தியன் 2 தோல்வி எதிர்பாராத ஏமாற்றமாக அமைந்தது. இதனால் மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் கமல். நாயகன் வெளியாகி சுமார் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் கமல் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
கமலுடன் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் நடிக்கும் தக் லைஃப் படத்துக்கு, ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கேங்ஸ்டர் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகும் தக் லைஃப் கமலுக்கு இன்னொரு பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். பொன்னியின் செல்வன் ரிலீஸானதுமே தக் லைஃப் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார் மணிரத்னம். ஆனாலும், நடுவில் ஜெயம் ரவியும் துல்கர் சல்மானும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகியதால், தக் லைஃப் படமே ட்ராப் ஆகிறதா கேள்வி எழுந்தது.
அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்பதாக கமலுடன் இணைந்தார் சிம்பு. இதனையடுத்து மீண்டும் தக் லைஃப் ஷூட்டிங் வேகமெடுத்தது. இந்நிலையில், கடந்த வாரம் தக் லைஃப் படத்தில் தனது போர்ஷனுக்கு டப்பிங் கொடுத்தார் சிம்பு. தக் லைஃப் ஷூட்டிங் முடிந்ததும் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் எஸ்டிஆர் 48 படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. தேசிங்கு பெரியசாமி இயக்கும் இப்படத்தில் நடிப்பதற்கு ரெடியாக இருந்த நேரத்தில் தான், தக் லைஃபில் கமிட்டானார் சிம்பு. அதேநேரம் எஸ்டிஆர் 48 படப்பிடிப்பு தாமதமாகக் கூடாது என்பதற்காக, தக் லைஃப் படத்தில் சிம்புவின் போர்ஷனை முதலில் முடித்துவிட்டதாக சொல்லப்பட்டது.
மேலும் படிக்க - தனுஷின் ராயன் 3வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
ஆனால், இப்போது கமல்ஹாசனும் டப்பிங் வேலைகளை தொடங்கியிருப்பது ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. கமல்ஹாசன் டப்பிங் பணிகளில் கலந்துகொண்ட வீடியோவை தக் லைஃப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் தக் லைஃப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துவிட்டதா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட இதுதான் உண்மை என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதாவது தக் லைஃப் படத்தின் 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், மீதமிருக்கும் பகுதிகளும் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது.
அதன்படி, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் தக் லைஃப் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என்றும், அதேவேகத்தில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. நவம்பர் அல்லது டிசம்பரில் தக் லைஃப் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போதைய தகவல்படி அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் தக் லைஃப் படத்தை வெளியிட மணிரத்னம் பிளான் செய்து வருகிறாராம். அதேநாளில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படமும் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
When #Ulaganayagan voices it, the World listens!#ThugsDubbingBegins #VoiceofThugs#KamalHaasan #ThugLife #SilambarasanTR@ikamalhaasan #ManiRatnam @SilambarasanTR_ @arrahman #Mahendran @bagapath pic.twitter.com/6acx8X82Fl — Raaj Kamal Films International (@RKFI) July 29, 2024
What's Your Reaction?