Raayan Box Office: 100 கோடி வசூலை நெருங்கும் இயக்குநர் தனுஷ்… ராயன் 3வது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
Actor Dhanush Raayan Tamil Movie Box Office Collection : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக் கிழமை வெளியானது. ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள ராயன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
Actor Dhanush Raayan Tamil Movie Box Office Collection : தனுஷின் ராயன் திரைப்படம் கடந்த வாரம் 26ம் தேதி ரிலீஸானது. தனுஷின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான ராயன், அவருக்கு தரமான பர்த்டே கிஃப்ட்டாகவும் அமைந்துள்ளது. இயக்குநராக தனுஷின் இரண்டாவது படம் ராயன். அவரது இயக்கத்தில் முதலாவதாக ரிலீஸான பவர் பாண்டி, விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் சுமார் ரகம் தான். அதேநேரம் பவர் பாண்டியில் ராஜ்கிரன் தான் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் ராயனில் இயக்குநர் ப்ளஸ் ஹீரோ ஃபார்முலாவில் களமிறங்கி வெற்றிப் பெற்றுள்ளார் தனுஷ்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராயன் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வடசென்னை பின்னணியில் உருவாகியுள்ள ராயன் படம் முழுக்க செட்டிங் போட்டு தான் எடுக்கப்பட்டுள்ளதாம். வடசென்னை போன்ற செட்டிங்கிற்காக மட்டுமே 30 கோடி ரூபாய் வரை பட்ஜெட் போடப்பட்டுள்ளது. இதுதவிர படத்தின் மொத்த பட்ஜெட்டே 50 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்(Box Office Collection) மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது.
அதோடு தனுஷின் 50வது(Dhanush 50th Movie) படம் ராயன், அதனை அவரே இயக்கி நடித்துள்ளதும் இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியது. ஆனால், சொல்லி அடித்த கில்லி போல, ராயன் படத்தை சூப்பர் ஹிட்டாக்கிய தனுஷ், பாக்ஸ் ஆபிஸிலும் இறங்கி சம்பவம் செய்துள்ளார். ராயன் முழுக்க ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளதால், படத்துக்கு சென்சாரில் ஏ சர்டிபிகேட் தான் கிடைத்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பாதிப்பு இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராசா என்பதாக ராயன் வசூலில் மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, ராயன் படத்தின் முதல் நாள் வசூல் (Raayan Box Office Collection) 20 கோடி ரூபாய் என சொல்லப்பட்டது. முதல் நாளில் ஓரளவு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால், இரண்டாவது நாளான சனிக்கிழமை டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டியது ராயன். இதனால் இரண்டாவது நாளில் 50 கோடி வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல், ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் ராயனுக்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு இருந்தது. ராயனுக்குப் போட்டியாக வேறு எந்த படங்களும் இல்லாததால், மொத்த கூட்டமும் ஒரே பக்கமாக கூடியது.
மேலும் படிக்க - தனுஷின் மொத்த சொத்து மதிப்பு
இதன் காரணமாக ராயன் படத்தின் மூன்றாவது நாள் வசூல், 75 கோடி ரூபாயை கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. படக்குழு தரப்பில் இருந்து இதுபற்றி அபிஸியலாக அறிவிக்கவில்லை என்றாலும், சோஷியல் மீடியா சினிமா ட்ராக்கர்களின் அப்டேட்டில் 75 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றே நாட்களில் 75 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ள ராயன், இந்த வாரத்தில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் தனுஷ் இயக்குநராகவும் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செய்து மாஸ் காட்டவுள்ளார்.
ராயன் படத்தில் தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ்ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். துஷாரா விஜயனின் துர்கா கேரக்டருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முக்கியமாக ராயன் படத்தின் வெற்றிக்கு ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை தான் செம்ம மாஸ் எனவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். தனுஷின் ராயன் வெற்றிப் பெற்றுள்ளதால், அவரது இயக்கத்தில் உருவாகும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
What's Your Reaction?