Raayan Box Office Day 2: இரண்டே நாளில் 50 கோடி வசூல்… தனுஷின் ராயன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!
Actor Dhanush Raayan Tamil Movie Box Office Collection : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் இந்த வாரம் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ராயன், இரண்டே நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தரமான சம்பவம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Actor Dhanush Raayan Tamil Movie Box Office Collection : தனுஷின் 50வது படமாக வெளியாகியுள்ள ராயன், கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராயன் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ்ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷின் 50வது படம் என்பதோடு, அவரே இயக்கி நடித்துள்ளதால் ராயனுக்கு(Raayan) தாறுமாறான எதிர்பார்ப்பு இருந்தது.
அதன்படி, ராயன் படத்துக்கு முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில்(Raayan Box Office) நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. தனுஷ் ரசிகர்கள் ராயனை கொண்டாடி வந்தாலும், மற்றவர்களின் பார்வையில் இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. ஆனாலும், தனுஷ் ப்ளஸ் ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் ராயன் மிகப் பெரிய வெற்றி என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் பெரும் பலமே ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை தான் ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். ‘அடங்காத அசுரன்’ பாடலில் வரும் “உசுரே நீதானே..” என்ற இடத்தில் இசைப்புயலின் ஹை-பிச், தியேட்டரையே அதிர வைக்கிறது.
இந்த ஒரு சீனுக்காகவே ராயன் படத்தை தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் என பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்தாண்டில் முதல் சனிக்கிழமை தனுஷின் ராயன் படத்துக்கு தான் டிக்கெட் புக்கிங் அதிகமாக இருந்ததாக புக் மை ஷோ தளம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராயன் படத்துக்கு 257.9கே டிக்கெட்டுகள் பும் மை ஷோ தளத்தில் விற்பனையாகியுள்ளது. இரு வாரங்களுக்கு முன்னர் வெளியான கமலின் இந்தியன் 2, அனைத்து மொழிகளிலும் சேர்ந்தே 242.7கே டிக்கெட்டுகள் தான் விற்பனையாகின. அதனையடுத்து விஜய் சேதுபதியின் மகாராஜா, சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படங்கள் உள்ளன.
அதேபோல், தனுஷின் ராயன் தான் இந்தாண்டு இதுவரை வெளியான தமிழ்ப் படங்களில் வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறதாம். முதல் நாளில் உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளிலும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் ராயன் அமர்க்களப்படுத்தியுள்ளது. அதன்படி, ராயன் இரண்டாவது நாள் வசூல் 30 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக மொத்தம் இரண்டே நாட்களில் 50 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்து மிரள வைத்துள்ளது.
மேலும் படிக்க - தனுஷின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?
பவர் பாண்டியை தொடர்ந்து இயக்குநராக தனுஷின் இரண்டாவது படம் ராயன். அதோடு தனது 50வது படம் என்பதால், மற்ற இயக்குநர்களை நம்பாமல் அவரே இயக்குநராக களமிறங்கி சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார். முதல் இரண்டு நாட்களில் 50 கோடி வசூலித்துள்ளதால், ராயன் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் கண்டிப்பாக இணைந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ராயன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, ராயன் படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?