Dhanush Networth: ஒல்லிப்பிச்சான் ட்ரோல்களை கடந்து சாதித்த தனுஷ்… சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Actor Dhanush Net Worth 2024 : கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான தனுஷ், பாலிவுட், ஹாலிவுட் வரை மாஸ் காட்டி வருகிறார். இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடும் தனுஷுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு பற்றி இங்கே பார்க்கலாம்.

Actor Dhanush Net Worth 2024 : துள்ளுவதோ இளமை மூலம் சினிமாவில் அறிமுகமான தனுஷ், 22 ஆண்டுகளில் 50 படங்களில் நடித்துவிட்டார். இதில் கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஹாலிவுட்டிலும் மாஸ் காட்டியது தான் தனுஷின் தரமான சம்பவங்கள் எனலாம். ஆரம்ப காலங்களில் அண்ணன் செல்வராகவன் தயவில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை என ஹிட் கொடுத்த தனுஷ், அதன் பின்னர் வெரைட்டியான கதைகளில் நடிக்கத் தொடங்கினார்.
முக்கியமாக வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்த பின்னர் தனுஷின் மார்க்கெட் வேற லெவலுக்குச் சென்றது. பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை இந்த நான்கு படங்களுமே, தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் கல்ட் கிளாஸிக்காக கொண்டாடப்படுகிறது. அதேபோல், மரியான், வேலையில்லாத பட்டதாரி, மாரி, திருச்சிற்றம்பலம், இந்தியில் ரஞ்சனா, அத்ரங்கி ரே, ஹாலிவுட்டில் கிரே மேன் என தனுஷின் ஹிட் லிஸ்ட் பெரியது. இன்னொரு பக்கம் பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் எனவும் கோலிவுட்டில் தனக்கான சிம்மாசனத்தை பார்த்து பார்த்து செதுக்கியவர் தனுஷ்.
ஆரம்பத்தில் ஒல்லிப்பிச்சான் ஹீரோ என வந்த ஏராளமான ட்ரோல்களை எல்லாம், தனது நடிப்பால் ஓவர்டேக் செய்தார். அதேபோல், கடந்த சில ஆண்டுகளாக அவர் மீது தனிப்பட்ட முறையில் பல விமர்சனங்கள் வந்தன. மேலும் மனைவி ஐஸ்வர்யாவையும் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். ஆனாலும், சினிமா கேரியரில் தனுஷின் ருத்ரதாண்டவம் அடங்க வாய்ப்பே இல்லை என்பதாக அடுத்தடுத்த உயரத்துக்கு சென்றுகொண்டே இருக்கிறார். தனுஷின் 50வது படமாக இந்த வாரம் வெளியான ராயன் திரைப்படமும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ராயனின் வெற்றி தனுஷின் 41வது பிறந்தநாளுக்கு தரமான கிஃப்ட்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆரம்பகாலம் முதல் தனது நடிப்பு குறித்து வெளியான விமர்சனங்களுக்கெல்லாம் தேசிய விருது வென்று பதிலடி கொடுத்த தனுஷ், பொருளாதார ரீதியாகவும் தற்போது கோடீஸ்வரனாக வலம் வருகிறார். 16 வயதில் போயஸ் கார்டனில் வீடு வாங்க வேண்டும் என கனவு கண்ட தனுஷ், அதனை தற்போது நனவாக்கியும் விட்டார். நிலத்துடன் சேர்த்து அந்த வீட்டின் மதிப்பு மட்டும் 80 முதல் 100 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதுதவிர சென்னையில் சில முக்கியமான இடங்களில் பிளாட்கள் வாங்கியுள்ளாராம் தனுஷ். அதன் மதிப்பும் கோடிகளில் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல், ஜாக்குவார், ஆடி ஏ8, ஃபோர்ட் முஸ்டாங், ரேஞ்ச் ரோவர், பிஎம்டபிள்யூ என விலையுயர்ந்த சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார் தனுஷ். இவைகளின் மதிப்பே 5 கோடிகளுக்கும் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.
மேலும் படிக்க - 50 கோடி வசூலித்த தனுஷின் ராயன்
ஒரு படத்திற்காக 30 முதல் 40 கோடி வரை சம்பளம் வாங்கும் தனுஷ், வருடத்திற்கு 100 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார். இதனடிப்படையில் தனுஷின் மொத்த சொத்து மதிப்பு(Actor Dhanush Net Worth) 400 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராயனை தொடர்ந்து தனுஷ் தற்போது குபேரா படத்தில் நடித்து வருகிறார். படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப ரியலாகவே தனுஷ் குபேரன் தான் என அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?






