அமெரிக்காவில் ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி.. குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பு!
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, குவாட் உச்சி மாநாடு நடக்கும் வில்மிங்டனில் உள்ள டெலாவேர் நகருக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடி, , ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை ஜோ பைடன் உற்சாகமாக வரவேற்றார். மாநாடு தொடங்குவதற்கு முன்பாக இவர்கள் 4 பேரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக நேற்று (21ம் தேதி) அமெரிக்கா புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார்.
டெலாவேரில் உள்ள கிரீன்வில்லே இல்லத்துக்கு சென்றடைந்த பிரதமர் மோடியை, ஜோ பைடன் உற்சாகமாக வரவேற்றார். பின்னர் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு, ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து பேசிய அதிபர் ஜோ பைடன், ’’இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு மிகவும் வலிமையாக, நெருக்கமாக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் உள்ளது. ஒவ்வொரு முறையும் இருவரும் சந்தித்து பேசும்போதும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும்ம் கண்டறிகிறோம். இன்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை’’ என தெரிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து பெருமையுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, ‘’டெலாவேரில் உள்ள கிரீன்வில்லே இல்லத்தில் என்னை வரவேற்பு அளித்த ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது சந்திப்பு மிகவும் பலனிப்பதாக இருந்தது. இந்த சந்திப்பு இருவரும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தத்’’என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, குவாட் உச்சி மாநாடு நடக்கும் வில்மிங்டனில் உள்ள டெலாவேர் நகருக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடி, , ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை ஜோ பைடன் உற்சாகமாக வரவேற்றார். மாநாடு தொடங்குவதற்கு முன்பாக இவர்கள் 4 பேரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதன்பிறகு குவாட் உச்சி மாநாடு தொடங்கிய நிலையில், அதில் பேசிய பிரதமர் மோடி, ‘’நான் மூன்றாவது முறையாக பதவியேற்றபிறகு குவாட் மாநாட்டில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒவ்வொரு திசையிலும் நாம் பல்வேறு விஷயங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளோம். இதில் நீங்கள் அனைவரும் மிக முக்கிய பங்கு வகித்துள்ளீர்கள். குவாட் மாநாட்டில் உங்கள் வலுவான அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக என் இதயத்தில் இருந்து நன்றி கூறுகிறேன்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
What's Your Reaction?