ஓமனில் நடுக்கடலில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்.. 13 இந்தியர்களின் கதி என்ன?

Oil Tanker Capsized In Oman : எண்ணெய் கப்பலில் இருக்கும் கேப்டன் உள்ளிட்ட யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் கப்பலில் இருக்கும் 13 இந்தியர்கள் உள்பட 16 பேரின் கதி என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

Jul 17, 2024 - 16:12
Jul 18, 2024 - 15:52
 0
ஓமனில் நடுக்கடலில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்.. 13 இந்தியர்களின் கதி என்ன?
oil tanker capsized in oman

Oil Tanker Capsized In Oman : ஓமன் நாட்டின் துறைமுக நகரமான ஏடனில் ஏராளமான எண்ணெய் வயல்கள் உள்ளன. இந்த நகரை நோக்கி சென்ற எண்ணெய் கப்பல் ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்ததாகவும், இதில் 13 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது கொமரோஸ் கொடி பொருத்தப்பட்டுள்ள இந்த எண்ணெய் கப்பலில் இலங்கை, இந்தியாவை சேர்ந்த 16 பேர் இருந்துள்ளனர். துறைமுக நகரமான ஏடன் நோக்கி சென்ற இந்த கப்பல் ஓமனின் முக்கியமான தொழில்துறை நகரமான துக்ம் அருகே 25 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக ஓமன் கடல்சார் பாதுகாப்பு மையம் கூறுகையில், ''ஏடன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பல் நடுக்கடலில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியது. கப்பலில் இருந்தவர்களின் நிலை என்ன? கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கலந்துள்ளதா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை'' என்றது.

எண்ணெய் கப்பல் கடலில் மூழ்கியது குறித்து தகவல் அறிந்த ஓமன் கடல்சார் பாதுகாப்புத் துறை கப்பலில் இருந்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்துக்குள்ளான எண்ணெய் கப்பல் 117 மீட்டர் நீளம் கொண்டது. இந்த கப்பல் கடந்த 2007ம் ஆண்டு கட்டப்பட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.

எண்ணெய் கப்பலில் இருக்கும் கேப்டன் உள்ளிட்ட யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் கப்பலில் இருக்கும் 13 இந்தியர்கள் உள்பட 16 பேரின் கதி என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. எண்ணெய் கப்பல் விபத்துக்குள்ளான துறைமுக நகரமான துக்ம்மில் அதிக அளவினான எண்ணெய் வயல்கள் உள்ளன. அங்கு பல்வேறு எரிவாயு சுரங்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow