இனி நான் பேசமாட்டேன்.. ஸ்பீக்கர் தான் பேசும்! சம்பவம் செய்த கிம்!

அணுஆயுத போர் தெரியும்? ஸ்பீக்கர் போர் தெரியுமா? தன்னுடைய எல்லைகளில் ஸ்பீக்கரை வைத்து சத்தம் எழுப்பி வினோத முறையில் சண்டையிட்டு வரும் தென்கொரியா, வடகொரியா நாடுகளின் ’ஸ்பீக்கர் போரை’ விவரிக்கிறது இந்த தொகுப்பு..

Dec 2, 2024 - 17:49
 0
இனி நான் பேசமாட்டேன்.. ஸ்பீக்கர் தான் பேசும்! சம்பவம் செய்த கிம்!

கொரியா முன்னொரு காலத்தில் ஒன்றிணைந்து தான் இருந்தது. 2ம் உலகப்போரின் போது, கொரியாவின் வடக்கு பகுதி சோவியத் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதன் தெற்கு பகுதி அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதனால், 1950ல் இருந்து 1953 வரை வட மற்றும் தென் கொரியா இடையே போர் ஏற்பட்டது. இந்த போரையடுத்து கொரியாவில் இரு பகுதிகளும் முழுமையாக வெவ்வேறு துருவமாக எதிரும், புதிருமாக மாறிப்போயின.

தற்போது வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சியும் தென்கொரியாவில் ஜனநாயக ஆட்சியும் நடைபெற்று வருகிறது. வடகொரியாவை 2011ம் ஆண்டில் இருந்து ஆண்டு வருகிறார் கிம் ஜாங் உன், தென் கொரியாவை அதிபர் யூன் சுக் 2022ம் ஆண்டில் இருந்து ஆட்சி செய்து வருகிறார்.

என்னதான் போர் ஓய்ந்தாலும், இவ்விறு பகுதிகளுக்கு இடையே ஒரு அமைதியான போர் இருந்துக்கொண்டே தான் இருக்கும். தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக வடகொரியா மிரட்டுவதாக இருக்கட்டும், அதற்கு அச்சப்படாமல் பதில் கொடுக்கும் தென்கொரியாவாக இருக்கட்டும், இது அப்பகுதியில் ஒரு எண்ட்-டே இல்லாமல் செல்லும் டாப்பிக். அவ்வையில், சமீபத்தில் கூட குப்பைகளை ஏர் பலூன்கள் மூலம் கட்டி தென்கொரிவாவின் எல்லைகளில் வீசியது வடகொரியா. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தன்னுடைய எல்லைகளில் பெரிய ஸ்பீக்கர்களை வைத்து பாட்டை ஒலிக்க செய்தது தென்கொரியா. வடகொரியாவில் பாடல்கள் கேட்பது சட்டத்துக்கு புரம்பானது. இதனால் இவ்வாறு ஒரு நூதன முறையை கையில் எடுத்திருந்தது தென்கொரியா.

அந்த வரிசையில், தற்போது ”அவன் பொருள எடுத்து அவனையே போடணும்” என்ற வசனத்திற்கு ஏற்ப தன்னுடைய எல்லைகளில் ஸ்பீக்கர்களை வைத்து தென்கொரிய மக்களின் சித்தத்தை கலங்க வைக்கிறது வடகொரியா. 

கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தன்னுடைய எல்லைகளில் ஸ்பீக்கர்களை வைத்து, வாகனங்கள் மோதிக்கொள்ளும் சத்தம், கார் ஒலிப்பான் சத்தம், அலறல் சத்தம் என கேட்பதற்கு இனிமை இல்லாத சத்தத்தை ஒலிக்கச்செய்து வருகிறது வடகொரியா. இந்த சத்தங்களால் தென்கொரிய எல்லையில் உள்ள டங்சன் என்ற கிராமத்தில் வசிக்கும் மக்களின் அமைதி கெடுவதாகவும், இது அவர்களிம் மனநலனில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. வடகொரியாவின் இச்செயலால் மனரீதியாக சித்ரவதையை அனுபவிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வளவு நாள் அனுஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் மிரட்டி வந்த நிலையில், தற்போது இரு நாடுகளும் நடத்திவரும் இந்த ’ஸ்பீக்கர் போர்’ உலக நாடுகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow