உணவு திருவிழாவில் ஊமைக்குத்து.. கோவையை கொந்தளிக்க வைத்த மெகா SCAM?

கோவையில் நடைபெற்ற கொங்கு உணவு திருவிழாவை, கொங்கு SCAM திருவிழா என காட்டமாக பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர். இப்படி அனைவரும் வசைப்பாடும் அளவிற்கு அந்த நிகழ்ச்சியில் அப்படி என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

Dec 2, 2024 - 17:40
Dec 2, 2024 - 17:59
 0
உணவு திருவிழாவில் ஊமைக்குத்து.. கோவையை கொந்தளிக்க வைத்த மெகா SCAM?

கோவை விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் கொங்கு  உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நவம்பர் 30ம் தேதியும், டிசம்பர் 1ம் தேதியும் நடைபெற்றது. இந்த உணவு திருவிழாவில், 400 விதமான உணவு வகைகள் அளிக்கப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டது.

 இதற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு 799 ரூபாய் எனவும், குழந்தைகளுக்கு 499 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டது. மேலும், புக் மை ஷோ மூலம் டிக்கெட் விற்பனைகளை செய்து இந்த உணவு திருவிழாவுக்கு பெரிய ஹைப்-ஐ உருவாக்கினர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். அதிலும், ஒரு நபருக்கு ’அன்லிமிடெட்’ முறையில் சாப்பாடு வழங்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். இதையெல்லாம் நம்பி அங்கு சென்றால், உணவு பற்றாக்குறை ஏற்பட ’உனக்கு அவ்வளவுதான் லிமிட்’ என சிலரை உணவளிக்காமல் அனுப்பியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கிட்டதட்ட 15 ஆயிரம் பேர் கலந்துக்கொண்டதாக கூறப்படும் இந்த உணவு திருவிழாவில், முறையான பார்க்கிங் வசதி கூட செய்துத்தரப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர்.

கூட்ட நெரிசலில், கியூவில் நின்று, தட்டுகளை ஏந்தி, உணவுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டதால்  டென்ஷனான பொதுமக்கள் ஒருவருடன் ஒருவர் மோதலில் ஈடுபட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. 

மேலும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை  எனவும் எந்த உணவு கேட்டாலும் இல்லை என்று கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சரி, இவ்வளவு சிரமப்பட்டு வாங்கிய அந்த உணவாவது ருசியாக இருக்கும் என்று பார்த்தால், ’இங்கு தரும் பணத்திற்கு  ஸ்டார் ஹோட்டலில்   சாப்பிட்டிருக்கலாம், உணவும் பாதி வெந்தும் வேகாமலும் ருசியில்லாமல் இருக்கிறது என கதறுகின்றனர் பொதுமக்கள்.

மேலும், மக்களின் பணத்தை பெற்றுக்கொண்டு முறையாக நிகழ்ச்சியை நடத்தாக ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விழாவின் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலான நிலையில், இது கொங்கு உணவு திருவிழா இல்ல, கொங்கு SCAM திருவிழா எனவும், இந்த நிகழ்ச்சியை நடத்திய chef மாதம்பட்டி ரங்கராஜின் டீம் தான் எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow