உட்கட்சி விவகாரங்களை விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை - பாமக தலைவர் அன்புமணி

கட்சியின் பொதுக்குழுவின் காரசார விவாதங்கள் நடைபெறுவது சகஜமே. கட்சியின் உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Dec 29, 2024 - 17:08
 0
உட்கட்சி விவகாரங்களை விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை - பாமக தலைவர் அன்புமணி
உட்கட்சி விவகாரங்களை விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை - பாமக தலைவர் அன்புமணி

புதுச்சேரியில் அருகேயுள்ள பட்டானூரில் நேற்று (டிச.28) பாமக புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கும் கட்சியின் இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமனம் செய்வது தொடர்பாக கருத்து மோதல் ஏற்பட்டது.  

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியின் புதிய தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தார். யாரும் எதிர்பாராத வகையில், கட்சியின் தலைவர் அன்புமணி முகுந்தன் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருவரும் மாறி, மாறி வார்த்தை மோதல் நிகழ்த்திய நிலையில், கடைசியில்,  இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும். கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளலாம் என்று கூறினார்.

தொடர்ந்து, பேசிய அன்புமணி, 'நான் பனையூரில் கட்சி அலுவலகம் திறந்துள்ளேன், விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்' என்று கூறிவிட்டு, தொலைப்பேசி எண்ணை கூறிவிட்டு,  மைக்கை தூக்கி மேடையில் போட்டது மட்டுமில்லாமல் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். தந்தை மகன் மோதல் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமில்லாது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று வெடித்த பிரச்னையை தொடர்ந்து, இருவரையும் சமாதானம் செய்வதற்கு ஜி.கே. மணி தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது. தொடந்து,  விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். இருவருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, பேசியதாவது: 

பாமக ஒரு ஜனநாயகக் கட்சி. அத்தகைய கட்சியின் பொதுக்குழுவின் காரசார விவாதங்கள் நடைபெறுவது சகஜமே. கட்சியின் உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தப் பிரச்சினையைப் பற்றி நாங்கள் பேசிக் கொள்வோம். ஐயா எங்களுக்கு என்றும் ஐயா தான்” என்றார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதித்தோம். சித்திரை முழுநிலவு மாநாட்டைப் பற்றி, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான போராட்டங்கள், 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு, விவசாய மாநாட்டுக்குப் பின்னர் அடுத்தடுத்து பாமக முன்னெடுக்க வேண்டிய போராட்டங்கள் என்னென்ன என்பன குறித்து ஆலோசனை செய்தோம்.

“உட்கட்சி பிரச்சினையை நாங்களே பேசித் தீர்ப்போம். பாமக ஒரு ஜனநாயக கட்சி. அத்தகைய கட்சியின் பொதுக்குழுவில் காரசார விவாதங்கள் நடைபெறுவது சகஜம்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow