Flipkart Big Billion Days 2024 Sale : செப்டம்பர் 27 வரை வேற ஸ்மார்ட் போன் வாங்காதீங்க!
Flipkart Big Billion Days 2024 Sale-ல் உங்களது பட்கெட்டுக்கு ஏற்ற லேட்டஸ் டெக்னாலஜி ஸ்மார்ட் போன்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Flipkart Big Billion Days 2024 Sale : பிரபல ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான Flipkart-ல் தற்போது Flipkart Big Billion Days 2024 Sale வருகிற 27ம் தேதி தொடங்குகிறது. மற்ற ஆண்டுகள் போல் இல்லாமல் இந்த ஆண்டு ஏகபோக ஆஃபர்களை அள்ளி வழங்கி வருகிறது. Flipkart - இன் இந்த Big Billion Days விற்பனையானது அனைவரது பட்ஜெட்டுக்கும் ஏற்றதாக உள்ளது. குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள், பரிமாற்றச் சலுகைகள் மற்றும் கட்டணமில்லா EMI விருப்பங்கள் ஆகியவற்றை பிளிப்கார்ட் வழங்கி வருகிறது. அந்த வகையில் லேட்டஸ்ட் டெக்னாலஜியுடனும், அப்கிரேடட் வெர்ஷனுடனும் உங்களது பட்ஜெட்டில் அடங்கக்கூடியதாகவும் உடைய புதிய ஸ்மார்ட் போன்கள் குறித்து பார்க்கலாம். அதன் விலைப் பட்டியல் Flipkart Big Billion Days 2024 Sale தொடங்கிய பின்பு வெளியாகும்.
Nothing Phone (2a) :
Nothing நிறுவனத்தின் லேட்டஸ்ட் தயாரிப்பான Nothing Phone (2a) தற்போது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கு வந்துள்ளது. MediaTek உடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட Dimensity 7200 Pro செயலி மூலம் இந்த ஸ்மார்ட் போன் இயக்கப்படுகிறது. 20 GB RAM கொண்டுள்ள இந்த போன் அதீத வேக ஆற்றல் மற்றும் பவர் அடங்கியுள்ளது. இதிலுள்ள 5,000 mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கெப்பாசிட்டியை கொண்டுள்ளது. TrueLens Engine கொண்ட 50 MP பின்பக்க கேமராவும், 32 MP முன்பக்க கேமராவும் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு உறுதியளிக்கிறது. 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே கொண்ட இந்த ஸ்மார்ட் போனில் 1,300 nits வெளிச்சமும் 120 Hz refresh rate-உம் அடங்கியுள்ளது. இந்த போன் அறிமுகமான ஒரு மணி நேரத்தில் சுமார் 60,000 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Infinix GT 20 Pro :
Infinix GT 20 Pro ஸ்மார்ட் போன் 8GB RAM/256GB ஸ்டோரேஜுடன் 6.78-inch Full HD+ LTPS AMOLED டிஸ்பிளே உடன் வருகிறது. இதனால் உங்களுக்கு 1300 nits பிரட்னெஸும் 144Hz refresh rate-உம் உங்களுக்கு கிடைக்கிறது. MediaTek Dimensity 8200 Ultimate chipset மற்றும் Mali G610-MC6 GPU மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட் போன், Pixelworks X5 Turbo gaming display chip அம்சத்தை பெற்றுள்ளது. இது மேம்பட்ட கிராபிக்ஸ் செயல்திறனை உங்களுக்கு வழங்குகிறது. 5,000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வரும் இந்த போன், இரண்டு வருட மென்பொருள் புதுப்பிப்புகளையும் கூடுதல் வருட பாதுகாப்பு இணைப்புகளையும் வழங்குகிறது.
Vivo T3 Pro :
Vivo T3 Pro 5ஜி ஸ்மார்ட்போன் 6.77-inch Full HD+ 3D curved AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது Qualcomm Snapdragon 7 Gen 3 SoC மற்றும் Adreno 720 GPU மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட் போன், 8GB LPDDR4x RAM மற்றும் 256GB UFS 2.2 சேமிப்பகத்தை ஆதரிக்கிறது. Dual கேமரா அம்சம் கொண்ட இந்த போனில் 50MP Sony IMX882 primary sensor, 8MP ultra-wide lens மற்றும் 16MP முன்பக்க கேமரா அடங்கியுள்ளது. 5,500mAh பேட்டரி இருப்பதால் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான FunTouch OS 14 இல் இயங்கும் இந்த ஸ்மார்ட் போன், இரண்டு வருட OS புதுப்பிப்புகள் மற்றும் மூன்று வருட பாதுகாப்பு இணைப்புகளுடன் வருகிறது.
What's Your Reaction?