TVK Vijay: “பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல..” விஜய் பெயரை சொன்ன கரு பழனியப்பன்... உதயநிதி ஷாக்கிங்!

உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் பெயரை இயக்குநர் கரு பழனியப்பன் உச்சரித்தார். அப்போது அங்கிருந்த மாணவர்கள் அரங்கம் அதிரும் வகையில் ஆர்ப்பரித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sep 18, 2024 - 16:18
 0
TVK Vijay: “பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல..” விஜய் பெயரை சொன்ன கரு பழனியப்பன்... உதயநிதி ஷாக்கிங்!
உதயநிதி - விஜய்

சென்னை: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் தடம் பதிக்கவுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், அடுத்தடுத்து கொடி அறிமுகம், முதல் மாநாடு என படு பிஸியாக வலம் வருகிறார். விஜய்யின் இந்த நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசியலில் களமிறங்குவது உதயநிதிக்கு எதிரான போட்டியாகவே பார்க்கப்படுகிறது. கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா என இரு மாபெரும் ஆளுமைகள் மறைவுக்குப் பின்னர், தமிழக அரசியலில் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இவர்களை தொடர்ந்து தற்போதைய முதலமைச்சர் முக ஸ்டாலின், கடந்த அதிமுக ஆட்சியின் போது முதலமைச்சராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி ஆகியோர் களத்தில் ஆக்ரோஷமாக மோதி வருகின்றனர். இன்னொரு பக்கம் பாஜகவின் அண்ணாமலை, நாதக சீமான், விசிக திருமாவளவன் ஆகியோரும் தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக வைத்துள்ளனர். முக்கியமாக திமுகவில் திடீரென என்ட்ரி கொடுத்த உதயநிதி ஸ்டாலின், தற்போது அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். விரைவில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் உதயநிதியின் அடுத்த டார்க்கெட், முதலமைச்சர் பதவியாக தான் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய்யும் அரசியலில் களமிறங்கியது உதயநிதிக்கு பெரும் சவலாக பார்க்கப்படுகிறது. உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்த முதல் படத்தில் ஹீரோவாக நடித்தது விஜய் தான். சினிமாவில் இருவருக்கும் நல்ல நட்பு இருந்தாலும், அரசியல் என்றவுடன் எதிரும் புதிருமாக களத்தில் நிற்கின்றனர். முக்கியமாக விஜய்யின் பட நிகழ்ச்சிகள் கேன்சல் ஆனாலும் சரி, தவெக மாநாட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றாலும் சரி, அதுகுறித்து உதயநிதியிடம் கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்து வருகின்றனர் செய்தியாளர்கள்.

தவெக கொடி அறிமுகம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியிருந்த உதயநிதி, அக்கட்சியின் மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்படுகிறதா என்ற கேள்விக்கும் காட்டமாக பதிலளித்திருந்தார். இந்நிலையில், தற்போது உதயநிதி முன்னிலையில் விஜய்யின் பெயர் இயக்குநர் கரு பழனியப்பன் உச்சரிக்க, மாணவர்கள் ஆர்ப்பரித்த சம்பவம் வைரலாகி வருகிறது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தந்தை பெரியார் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற இயக்குநர் கரு பழனியப்பன், பெரியாரை இன்றைய தலைமுறையில் கொண்டு சேர்த்ததில் எதிரிகளுக்கும் பங்குண்டு, பெரியாரை கண்டு இன்றும் எதிரிகள் அஞ்சுகின்றனர் என பேசினார்.

மேலும், நிர்மலா சீதராமனிடம் கோரிக்கை வைத்த அன்னபூர்ணா சீனிவாசனுக்கு ஏன் தமிழ்நாடே ஆதரவளித்து?. தமிழர் ஒருவரின் சுயமரியாதையை சீண்டியதால் தான்; தமிழ்நாட்டு மக்கள் என்றும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் எனக் கூறியிருந்தார். பகுத்தறிவு இருந்ததால் தான் மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் மூடநம்பிக்கை பேச்சை எதிர்த்தார். தமிழ்நாட்டில் பெரியாரை மறுதலித்து ஒரு அரசியல் பண்ணவே முடியாது என்பதால் தான் நேற்று விஜய் பூ தட்டை தூக்கிக்கொண்டு பெரியார் திடலுக்குச் சென்றார். பெரியார், அண்ணாவை பின்தொடர்பவர்கள் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு பிடிக்கும் என பேசினார்.  

மேலும் படிக்க - விஜய் வந்தால் அழைத்து செல்வோம்... தமிழிசை அதிரடி!

இந்த உரையின்போது, ஒரு இடத்தில் ‘தளபதி’ என அவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை குறிப்பிட்டு பேச வந்தார். அப்போது அங்கிருந்த மாணவர்கள், ‘தளபதி’ என்பது விஜய் தான் என நினைத்துக்கொண்டு அரங்கம் அதிர ஆர்ப்பரித்தனர். முன்னதாக விஜய் பெரியார் திடலுக்குச் சென்றது குறித்து கரு பழனியப்பன் பேசிய போதும், மாணவர்களின் உற்சாகமாக குரல் எழுப்பினர். இத்தனைக்கும் இந்நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றிருந்தார். அவரது முன்னிலையில் விஜய் என்ற பெயரை கேட்டு மாணவர்கள் ஆர்ப்பரித்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2026 மட்டுமில்லாமல், தமிழகத்தில் அடுத்தடுத்து வரவிருக்கும் தேர்தல்களில் உதயநிதி, விஜய் இடையேயான போட்டி விஸ்வரூபம் எடுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow