Kristina Joksimovic : சாடிஸ்ட்டாக மாறிய கணவன்... மாடல் அழகியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கொடூரம்!

Switzerland Model Kristina Joksimovic Murder : சர்வதேச அளவில் பிரபலமான மாடல் அழகியை, அவரது கணவன் கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sep 14, 2024 - 18:52
Sep 14, 2024 - 19:12
 0
Kristina Joksimovic : சாடிஸ்ட்டாக மாறிய கணவன்... மாடல் அழகியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கொடூரம்!
சுவிட்சர்லாந்து மாடல் அழகி படுகொலை

Switzerland Model Kristina Joksimovic Murder : சுவிட்சர்லாந்து செர்பிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா ஜோக்சிமோவிக் மாடலிங் துறையில் பிஸியாக வலம் வந்தார். 2003 இல் மிஸ் நார்த்வெஸ்ட் சுவிட்சர்லாந்து பட்டத்தை வென்ற அவர், அதன் பின்னர் 2008ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சுவிட்சர்லாந்து போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறினார். அதேபோல், ஹாலிவுட்டிலும் ஒருசில படங்களில் நடித்துள்ள கிறிஸ்டினோ ஜோக்சிமோவிக், மாடலிங் பயிற்சியும் வழங்கி வந்தார். இதற்காக தனியாக ஒரு நிறுவனத்தை அவர் நடித்தி வந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கிறிஸ்டினோ ஜோக்சிமோவிக்(Kristina Joksimovic) அவரது கணவனால் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், கிறிஸ்டினோ ஜோக்சிமோவிக்கின் சில பாகங்களை ஆசிட் ஊற்றி முழுமையாக கரைத்துள்ளதும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிறிஸ்டினோ ஜோக்சிமோவிக்(Kristina Joksimovic), தாமஸ் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவருக்கும் இடையே, கடந்த சில மாதங்களாக அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக தாமஸ் மனநிலை பாதிக்கப்பட்டவரை போல நடந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. 

இதுகுறித்து கிறிஸ்டினா ஜோக்சிமோவிக்கின் வழக்கறிஞர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், கிறிஸ்டினா ஜோக்சிமோவிக் தலையை சுவரில் வேகமாக அடித்து துன்புறுத்தியுள்ளார் தாமஸ். இதேபோல் அடிக்கடி கிறிஸ்டினோவின் முடியை பிடித்து இழுத்து அவரை கொடூரமாக தாக்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் ஒருகட்டத்தில் கணவன் தாமஸை விட்டு விலகுவது பற்றியும் கிறிஸ்டினோ தனது வழக்கறிஞருடன் ஆலோசனை செய்துள்ளார். ஆனால், அதற்குள்ளாக யாரும் எதிர்பார்க்காத அசம்பாவிதம் நடந்தேறியுள்ளது.  

கிறிஸ்டினா ஜோக்சிமோவிக்கை(Kristina Joksimovic) கழுத்தை நெறித்து படுகொலை செய்த தாமஸ், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டிற்குள்ளேயே மறைத்து வைத்துள்ளார். அதிலும் சில குறிப்பிட்ட பாகங்களை மட்டும் தனியாக ஆசிட் போன்ற ரசாயனம் ஊற்றி கரைத்துள்ளதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொலை செய்யப்பட்ட கிறிஸ்டினாவின் உடலை கைப்பற்றிய போலீஸார், அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் பற்றி கிறிஸ்டினாவின் கணவர் தாமஸ் முன்னுக்குப்பின் முரணாக போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.   
 

இதனால் தாமஸை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீஸார், அவரது மனநலம் குறித்து பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அவருக்கு கொடூரக் குற்றங்களை செய்யும் சாடிஸ்ட்டான மனநிலை இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து போலீஸார் தங்களது அடுத்தக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பிரபல மாடலிங் அழகி கிறிஸ்டினா(Kristina Joksimovic Murder)படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சுவிட்சர்லாந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow