குழந்தையின் பெயரை பகிர்ந்த ரித்திகாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து.. வைரலாகும் பதிவு...!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ரித்திகா தம்பதி தங்களது ஆண் குழந்தைக்கு அஹான் என்று பெயர் சூட்டியுள்ளனர். இதனை ரித்திகா தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த நிலையில், அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

Dec 2, 2024 - 14:10
Dec 2, 2024 - 14:16
 0
குழந்தையின் பெயரை பகிர்ந்த ரித்திகாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து.. வைரலாகும் பதிவு...!
குழந்தையின் பெயரை பகிர்ந்த ரித்திகாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து.. வைரலாகும் பதிவு...!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ரித்திகா தம்பதிக்கு இரண்டாவதாக கடந்த மாதம் 15 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதனால், ரோகித் சர்மா பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியில் பங்கேற்காமல், இருந்த நிலையில், நவ. 16 ஆம் தேதி இன்ஸ்டகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2015 ஆண்டு ரித்திகாவை திருமணம் செய்து கொண்டார். ரோகித் - ரித்திகா தம்பதிக்கு 2018 ஆண்டு சமைரா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ரோகித் - ரித்திகா தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் ரோகித்-ரித்திகா தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளை பார்ப்பதற்கு மைதானத்திற்கு செல்வது வழக்கம்.  ரோகித் எந்த மைதானத்தில் விளையாடினாலும், அங்கு ரித்திகா மற்றும் ரோகித்தின் மகள் சமைரா உடனிருப்பர். ஆனால், ரித்திகா கடந்த சில மாதங்களாக எந்த கிரிக்கெட் போட்டி தொடரையும் காண ரோகித்துடன் மைதானத்திற்கு செல்லவில்லை. சமீபத்தில் நடைபெற்ற மும்பை டெஸ்ட் போட்டியின் போட்டியின் போது ரித்திகா கர்ப்பமாக இருப்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது. அப்போது முதல் ரோகித்- ரித்திகா தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.  ரோகித் சர்மா தன் மனைவியின் பிரசவத்தின் போது உடனிருக்க வேண்டும் என்பதால், இந்த பயிற்சியில் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியானது. தொடர்ந்து ரோகித் 2 வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குழந்தை பிறந்து 15 நாட்கள் ஆன நிலையில், மேலும், குழந்தை பற்றிய எந்த தகவலையும் தெரிவிக்காமல் இருந்த ரோகித் - ரித்திகா தம்பதி இன்ஸ்டாகிராமில் ரித்திகா ஒரு ஸ்டோரி மூலம், தனது மகனின் பெயரை வெளியிட்டுள்ளார். ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எங்கள் குடும்பம் இப்போது நான்கு பேராகிவிட்டது” என்று தெரிவித்திருந்தார். அந்த புகைப்படத்திற்கு ரோகித் சர்மாவின் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறினர். 

ரித்திகா வெளியிட்ட புகைப்படத்தில் 4 கிறிஸ்துமஸ் பொம்மையில் அஹான் என்று எழுதப்பட்டுள்ளது. இதன்மூலம், ரோஹித் சர்மாவின் மகனுக்கு அஹான் என்று  தெரியவந்துள்ளது. இதற்கு ரோகித் சர்மாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow