சென்னையில் தடையை மீறி போராட்டம் - தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கைது

Tamilisai Soundararajan Arrest : நான் இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்தேன். ஆனால் அதற்குள்ளாகவே என்னை கைது செய்துள்ளார்கள்.

Dec 4, 2024 - 14:56
Dec 4, 2024 - 15:16
 0
சென்னையில் தடையை மீறி போராட்டம் - தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கைது
Tamilisai Soundararajan Arrest Today in Chennai

சென்னையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

Tamilisai Soundararajan Arrest : வங்கதேசத்தில் சிறுபான்மையினர்களாக இருக்கும் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை கண்டிக்கும் வகையில், வங்கதேச ஹிந்து மீட்பு குழு சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இந்த ஆர்ப்பாட்டத்திற்காக மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான இந்து அமைப்பினர் திரண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன்(Tamilisai Soundararajan), பாஜக தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் கருநாகராஜன், பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், வி.பி.துரைசாமி, இந்து முன்னணி இளங்கோவன், பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் என ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட  தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பேருந்துகளில் கைது செய்யப்பட்டவர்கள் ஏற்றப்பட்டு பெரியமேட்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக கைது செய்யப்பட்ட தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  “நான் இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்தேன். ஆனால் அதற்குள்ளாகவே என்னை கைது செய்துள்ளார்கள். இது தவறான செயல். எல்லோருடைய உரிமைகளையும் சொல்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். தங்களின் உணர்வுகளை சொல்ல முடியாத சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசிய பின்னர் கைது செய்திருக்கலாம்.ஆனால் காவல்துறை அதற்கு முன்னதாகவே கைது செய்துள்ளது” என குற்றம்சாட்டினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow