கார்த்திகை மாத ராசி பலன்கள்...செல்வமும் சந்தோஷமும் பெறப்போகும் ராசியினர் யார்?
நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் விருச்சிக ராசியில் நவம்பர் 16 முதல் டிச 15 வரை சஞ்சரிக்க உள்ளார். இந்த கார்த்திகை மாதத்தில் உருவாகக்கூடிய யோக பலன்கள் 12 ராசி மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் தொழில், ஆரோக்கியம், உறவுகள் மீது எப்படி தாக்கம் இருக்கும். இதுகுறித்து விளக்குகிறார் பிரபல ஜோதிடர் ஷெல்வி.
மேஷம்
உடல் நிலை சரி இல்லாதவர்கள் மாத்திரைகளை சரியாக ஏடுத்துக்கொள்வது அவசியம். பிள்ளைகளுடன் வாக்குவாதம் செய்யாமல் அவருகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் வேண்டாம். கையெழுத்திடுவதற்கு முன்பு படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நன்று. நிலம், வீடு, மண், தெய்வ வழிபாடு உள்ளிட்டவையிலிருந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். பேரும் புகழும் கிடைக்கக்கூடிய அமைப்பு ஏற்படும். அனுமானை வழிபடுவது நல்லது.
ரிஷபம்
பெருமாள் - தாயார், சிவன் - பார்வதி போன்ற ஜோடி தெய்வ வழிபாடு முக்கியம். கணவன் மற்றும் மனைவி இருவரது உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகளின் படிப்பு, வியாபாரம், தொழில் உள்ளிட்டவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த கார்த்திகை மாதத்தில் சுப காரியத் தடங்கல்கள் அனைத்தும் நிவர்த்தியடையும். ரத்த அழுத்தம் தொடர்பான உடல்நலக்கோளாறுகளில் அதிக கவனம் செலுத்துவது வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் துர்கை அம்மனை வழிவபடுவது சாலச்சிறந்தது. பணம் கொடுக்கல் வாங்கலில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. காது, மூக்கு, தொண்டையில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எதிரிகள் விஷயத்தில் பலம் அதிகரிக்கலாம். கையெழுத்திடுவதற்கு முன்பு படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நன்று. பெரியளவு சந்தோஷம், பெரியளவு அதிர்ஷ்டம் திடீரென ஏற்படும்.
கடகம்
முருக வழிபாடு மிக மிக மிக முக்கியம். வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்களுக்கு மாதவிடாட் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் கடக ராசிக்காரர்கள் தங்களது உத்யோகத்தில் உயர்ந்த பதவி மற்றும் பொறுப்புகளுக்கு வரலாம். எடுத்த காரியங்களில் ஜெயம். வாகனங்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். கூடா நட்பு கேடு விளைவிக்கும். உணர்ச்சிவசப்படுதல் தேவையில்லாக சிக்கல்களை ஏற்படுத்தும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சிவனை வழிபடுதல் வேண்டும். கால் மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். பாதத்தில் சிறு கோளாறுகள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். மனம் விட்டு பேசுவது சிம்மத்திற்கு ஏற்றம். தொழில், வியாபாரம், படிப்பு சார்ந்த விஷயங்களில் நன்மை பிறக்கும். முதலீடுகள் கிடைக்கும்.
கன்னி
பிள்ளையாரை வழிபடுவது சிறந்தது. ராசியில் உள்ள கேதுவால் தொந்தரவுகள் குறையும். குடும்பத்தில் அந்நியோயம் அதிகரிக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசாங்க உத்தியோகத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி. அலுவலகத்தில் பலரும் பாராட்டக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் மிகப் பெரிய ஏற்றம் உண்டாகும். முதுகுத் தண்டு கோளாறும் முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
துலாம்
குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படாமலிருக்க நீங்கள் வாயை மூடிக்கொண்டிருந்தால் போதும். நவகிரகத்தில் இருக்கக்கூடிய ராகு மற்றும் கேதுவிற்கு விளக்கேறுவது சிறந்தது. திடீர் அதிர்ட்ஷங்கள் ஏற்படும். சளி மற்றும் தேகப்பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும். மற்றபடி அனைத்து விஷயங்களும் சிறப்பு.
விருச்சிகம்
அனுமனும் நரசிம்மரும் முக்கியம். விநாயகரை வழிபட்டுவிட்டு இவர்கள் இருவரையும் வழிபடுதல் வேண்டும். செவ்வாய் வீட்டில் சூரியன் வருவதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல்நிலையில் கவனம் செலுத்தவில்லை என்றால் உயிர் போகிற அளவுக்கு கூட ஆபத்து ஏற்படலாம். குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு நடுவில் சிறிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. பசுமாட்டிற்கு உணவளிப்பது சிறந்தது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு மகான் வழிபாடு. வயிறு சார்ந்த பிரச்சனைகளில் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் கோபம் கூடாது. சிறிய சண்டை கூட பெரிய அளவு கஷ்டம் மற்றும் சங்கடத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் பிரச்சனைகளே கிடையாது. தடைகளாக இருந்த அனைத்தும் மாறும். எதிர்பாராத இடங்களிலிருந்து நல்ல செய்திகள் வரும்.
மகரம்
சுக்கிர வழிபாடு மிகுந்த நன்மை பயக்கும். கழுத்துப் பகுதியில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். 7ம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் துணை அல்லது துணைவியாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல ஏற்றம் இருக்கும். சூழ்நிலைகளை சமாளிக்கும் தைரியம் ஏற்படும். சுபகாரியங்கள் தடை நீங்கும். அக்கம்பக்கத்தினரே பொறாமை கொள்ளும் அளவிற்கு செல்வம் செழிக்கும். நம்பிக்கை உண்டாகும்.
கும்பம்
அம்மன்களின் வழிபாடு உங்களை மேன்மையடைய செய்யும். உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்த்துவிடுங்கள். படிப்பு மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து நல்ல செய்திகள் வரும். பெரியளவு சந்தோஷம், பெரியளவு அதிர்ஷ்டம் திடீரென ஏற்படும். இந்த கார்த்திகை மாதத்தில் சுப காரியத் தடங்கல்கள் அனைத்தும் நிவர்த்தியடையும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் பெருமாளை வழிபடுவது சிறந்தது. பரம்பரை நோய்கள் மூலம் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோருடைய தேக ஆரோக்கியத்தை மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். பசு மாட்டிற்கு உணவளித்தால் மிகுந்த நன்மை உண்டாகும். அற்புதமும் சந்தோஷமும் ஏற்றமும் ஏற்படும். வார்த்தைகளில் கவனம் தேவை. நல்ல விஷயங்கள் கைகூடி வரும் வேளையில், தேவை இல்லாமல் பேசி காரியத்தை கெடுத்து விட வேண்டாம்.
What's Your Reaction?