Thangar Bachan : விஜய் வெளியே வந்து மக்களுக்கு நல்லது செய்ய இதுவே சரியான நேரம் - இயக்குநர் தங்கர் பச்சான்

Thangar Bachan About Vijay : அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்தது நியாயப்படுத்தவில்லை. மக்களின் வரிப்பணத்தை எடுத்து கொள்ளையடிப்பவர்கள் அனைவரும் கொலைகாரர்கள் என இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.

Dec 4, 2024 - 17:41
Dec 4, 2024 - 18:05
 0
Thangar Bachan : விஜய் வெளியே வந்து மக்களுக்கு நல்லது செய்ய இதுவே சரியான நேரம் - இயக்குநர் தங்கர் பச்சான்
Thangar Bachan About TVK Vijay And Minister Ponmudi

மக்களின் வரிப்பணத்தை எடுத்து கொள்ளையடிப்பவர்கள் அனைவரும் கொலைகாரர்கள் என இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.

Thankar Bachan About Vijay : கடலூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்த பகுதிகளான செம்மண்டலம், தாழங்குடா, கண்டக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  மக்களின் வரிப்பணத்தை எடுத்து கொள்ளையடிப்பவர்கள் அனைவரும் கொலைகாரர்கள் எனவும் 2ஆயிரம், 6 ஆயிரம் என எவ்வளவு நாள் தான் நிவாரணம் அளித்து மக்களை ஏமாற்ற போகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்தது நியாயப்படுத்தவில்லை. ஆனால் அது மக்கள் கோபத்தின் வெளிப்பாடு எனவும் சேற்றை வாரி இறைத்தவர்கள் மண்ணில் உழைத்த விவசாயியாகத்தான் இருப்பார் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் நலத்திட்ட உதவிகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், விஜய் வெளியில் வந்து மக்களுக்கு நல்லது செய்ய இது சரியான தருணம் என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow