புதுச்சேரியில் முடங்கிய சாலைகள் சீரானது-இயல்பு நிலைக்கு திரும்பியதால் மக்கள் நிம்மதி
Puducherry Flood : கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை செல்லும் சாலையில் தற்பொழுது இயல்பு நிலை திரும்பி வாகனங்கள் வழக்கம்போல் சென்று வருகிறது.
வெள்ளப்பெருக்கு காரணமாக புதுச்சேரி- கடலூர் சாலை போக்குவரத்து கடந்த இரண்டு நாட்களாக துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் போக்குவரத்து துவங்கியதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Puducherry Flood : சாத்தனூர், வீடுர் அணைகள் திறக்கப்பட்டதால் புதுச்சேரி தென்பெண்ணை மற்றும் சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதன் காரணமாக ஆற்றை ஒட்டியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் புதுச்சேரி எல்லை பகுதியான கன்னியக்கோயில் அருகே உள்ள மனப்பட்டு ஏரி உடைந்து வெள்ள நீர் புதுச்சேரி கடலூர் பிரதான சாலை நடுவே ஆர்ப்பரித்து சென்றது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் ஏதும் கடலூர் சாலை வழியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் ஆர்ப்பரித்துப் போகும் வெள்ளை நீரால் பொதுமக்கள் அப்பகுதியை கடக்கவே மிகவும் சிரமப்பட்டனர். இதனால் புதுச்சேரி கடலூர் சாலை இரண்டு தினங்களாக முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இரண்டு தினங்களுக்கு பின் இன்று வெள்ள நீர் முற்றிலுமாக வடிந்து நிலைமை மீண்டும் சீரடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியதால் மீண்டும் கடலூர் சாலையில் போக்குவரத்து துவங்கியுள்ளது. அதன்படி கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை செல்லும் சாலையில் தற்பொழுது இயல்பு நிலை திரும்பி வாகனங்கள் வழக்கம்போல் சென்று வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக பிரதான சாலையான கடலூர் சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டது மிகுந்த சிரமங்களை ஏற்படுத்திய நிலையில் தற்போது போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?