பதவி விலகிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய தலைவர்... இதுதான் நடந்ததா?

ரிலையன்ஸ் பிராண்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான தர்ஷன் மேத்தா தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

Nov 22, 2024 - 02:18
Nov 22, 2024 - 02:45
 0
பதவி விலகிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய தலைவர்... இதுதான் நடந்ததா?
ரிலையன்ஸ் பிராண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தர்ஷன் மேத்தா பதவி விலகல்

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூலம் ஆண்டிற்கு கோடி கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார். இந்த நிறுவனமானது பல்வேறு துறைகளில் பரவி வருகிறது. முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.

ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட்டானது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமாகும். ஜியோர்ஜியோ அர்மானி [Giorgio Armani], போட்டேகா வெனெட்டா [Bottega Veneta], ஜிம்மி சூ [Jimmy Choo], பர்பெரி [Burberry] மற்றும் சால்வடோர் ஃபெர்ராகாமோ [Salvatore Ferragamo] போன்ற 50-க்கும் மேற்பட்ட பிராண்டுகளுடன் ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் இணைந்து இந்தியாவில் ஆடம்பர ஃபேஷனில் மிகப்பெரிய பங்கு வகித்து வருகிறது.

இந்நிலையில், ரிலையன்ஸ் பிராண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தர்ஷன் மேத்தா [Darshan Mehta] தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். மேலும், இவர் அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும், ரிலையன்ஸ் வணிகம் தொடர்பான வாய்ப்புகளை ஆராய்வதற்கும் உதவுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

2007-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியில் சேர்ந்த இவர், தனது திறமையின் மூலம் படிப்படியாக இந்த உயரத்தை அடைந்தார். தொடர்ந்து, தனது சிறந்த வழிகாட்டுதலின் மூலம் உலகம் முழுவதும் ரிலையன்ஸ் பிராண்ட் நிறுவனத்தை விரிவுப்படுத்த உதவினார்.

மேலும், இந்நிறுவனம் தற்போது 60-க்கும் மேற்பட்ட  மோனோ பிராண்ட் பொட்டிக்குகள் மற்றும் 350 ஷாப்-இன்-ஷாப்புகளை நடத்தி வருகிறது. இதில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தர்ஷன் மேத்தா, Tommy Hilfiger, Gant, மற்றும் Nautica போன்ற பிரபல உலகளாவிய பிராண்டுகளை இந்திய சந்தைக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. மேலும், முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கும் தர்ஷன் மேத்தா பெரும் உதவியாக இருந்ததாக கருதப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow