2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை.. சிக்குவாரா முன்னாள் எம்.எல்.ஏ?

ஆந்திரா மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Nov 8, 2024 - 00:05
Nov 8, 2024 - 00:16
 0
2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை.. சிக்குவாரா முன்னாள் எம்.எல்.ஏ?
முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிராந்தி ஸ்ரீநிவாஸ் தொடர்புடைய இடங்களில் நேற்று முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அவருடைய நிறுவனம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வருமானவரித்துறையினர் சி.ஆர்.பி.எஃப் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் எம்.எல்.ஏ கிராந்தி ஸ்ரீனிவாஸ், கடல் உணவு தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை தமிழகம், ஆந்திராவில் மேற்கொண்டு வருகிறார். 1998 ஆம் ஆண்டு முதல் இறால் நண்டு உள்ளிட்ட கடல் உணவுகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வெங்கடேஸ்வரா கிராமணி தெருவில் அமைந்துள்ள கிராந்தி சீ ஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் நேற்று காலை முதல் ஐந்துக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்று துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் இறால் மற்றும் நண்டு உள்ளிட்டவைகளை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தொழில் நடந்து வருகிறது. கடந்த ஓராண்டில் எந்தெந்த மாநிலங்களுக்கு சி ஃபுட்ஸ் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டது, அதில் வந்துள்ள வருமானம் எவ்வளவு? முறையான வருமான வரி தாக்கல் செய்தனரா உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனை நிறைவடைந்த பின்னரே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து தெரிய வரும் என வருமான வரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow