Bird Flu Virus : பறவை காய்ச்சலால் அபாயம்..தேடி தேடி அழிக்கப்படும் கோழிகள்..மக்களே உஷார்!

Bird Flu Virus Spreads in Odisha : ஒடிசாவில் பறவைக் காய்ச்சல் அசுர வேகத்தில் பரவுவதால், ஆயிரக்கணக்கான கோழிகளை தேடித் தேடி அழிக்கிறது ஒடிசா அரசு.

Aug 26, 2024 - 12:07
Aug 26, 2024 - 14:05
 0
Bird Flu Virus : பறவை காய்ச்சலால் அபாயம்..தேடி தேடி அழிக்கப்படும் கோழிகள்..மக்களே உஷார்!
Bird Flu Virus Spreads in Odisha

Bird Flu Virus Spreads in Odisha : சமீப காலமாக உலகம் முழுவதும் பறவை காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த பாதிப்புகள் மக்களிடையே அச்சத்தையும் அதிகரித்துள்ளது. பறவைக் காய்ச்சல் H5N1 என்ற வைரசால் பரவுகிறது. இந்த வைரஸ் தாக்கினால், சுவாச பாதை மற்றும் நுரையீரல் முதலில் பாதிப்படைந்து பின்னர் உடல் முழுவதும் பரவி, மூளையை கூட தாக்கி அழிக்கலாம்.

ஒடிசாவில் பறவைக் காய்ச்சல் அசுர வேகத்தில் பரவுவதால், ஆயிரக்கணக்கான கோழிகளை தேடித் தேடி அழிக்கிறது ஒடிசா அரசு. பூரி மாவட்டத்தில் தான் பறவைக் காய்ச்சல் தொடங்கியுள்ளது எனவும் இதனால் 1,800 பறவைகள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விஷயம் தீவிரமாவதற்கு முன் பாதிக்கப்பட்டுள்ள 20,000 கோழிகளை அழிக்க திட்டமிட்டுள்ளதாக நோய் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த H5N1 வைரஸ் தொற்று, மனிதர்கள், பன்றிகள், நாய்கள், பூனைகள், குதிரை மற்றும் பிற விலங்குகளை தாக்கும். நோய் தொற்றின் தீவிரத்தால் இதனை பெருந்தொற்றாக கருதுகிறது உலக நாடுகள். 

அறிகுறிகள்:

பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, காய்ச்சல் சோர்வு, இருமல், தசை வலி, தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல், சிவந்த கண்கள் ஆகிய அறிகுறிகள் தோன்றும்.

மனிதர்களுக்கு எவ்வாறு பரவுகிறது?

வைரசால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் எச்சம், சிறுநீர் ஆகியவற்றின் மூலம் மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவுகிறது. பறவை காய்ச்சல் அரிதாகவே பரவும் எனவும் ஆனால் பரவினால் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பறவை காய்ச்சலால் நிமோனியா, கடுமையான சுவாசக் கோளாறு, பாக்டீரியா தொற்று, செப்சிஸ், மூளை வீக்கம் ஆகியவை ஏற்படக்கூடும்.

கோழி கறி சாப்பிட்டால் நோய் பரவுமா?

கோழிகளை சாப்பிடுவதாலும் முட்டைகள் சாப்பிடுவதாலும் பறவை காய்ச்சல் பரவுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வெகு நாட்களாக இருந்து வருகிறது. இந்த சந்தேகத்தை போக்கும் விதமாக பதிலளித்துள்ளனர் மருத்துவர்கள். பொதுவாக கோழிகளையும், முட்டைகளையும் உயர் வெப்ப நிலையில் சமைப்பதால் அதிலுள்ள வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் மடிந்துவிடும். கோழி இறைச்சியை நன்கு சமைத்து சாப்பிடும் போது பறவை காய்ச்சல் வருவதற்காக வாய்ப்புகள் இல்ல எனவும் முட்டைகளை சமைக்காமல் எடுத்துக் கொள்வதால் காய்ச்சல் பரவலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதே வேளையில், கோழி பண்ணைகளின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அருகில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் படிக்க: பிச்சை எடுத்து வந்த பதவி அல்ல IPS பதவி.. வருண்குமார் - சீமான் உச்சக்கட்ட மோதல்

தடுப்பது எப்படி?

மருத்துவர்களின் கூற்று படி, பறவை காய்ச்சல் வராமல் தடுக்க, விலங்குகள், பறவைகள் இருக்கும் இடத்தில் வேலை பார்க்கும்போது,  உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும். அடிக்கடி கைகழுவ வேண்டும், H5N1 வைரஸ் அதிகம் பரவியுள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிக்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow