Trichy SP Varunkumar IPS : பிச்சை எடுத்து வந்த பதவி அல்ல IPS பதவி.. வருண்குமார் - சீமான் உச்சக்கட்ட மோதல்

Trichy SP Varunkumar IPS Twitter Post on Seeman : உயிரைப் போல் நேசித்து தேர்ந்தெடுத்த காக்கிச் சட்டை மீது உள்ள காதல் என்றும் தொடரும் என்று வருண்குமார் ஐபிஎஸ் கூறியுள்ளார். பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், நான் காக்கிச் சட்டையை கழற்றுவது பற்றி யோசிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Aug 26, 2024 - 10:45
Aug 26, 2024 - 12:31
 0
Trichy SP Varunkumar IPS : பிச்சை எடுத்து வந்த பதவி அல்ல IPS பதவி.. வருண்குமார் - சீமான்  உச்சக்கட்ட மோதல்
varunkumar ips vs seeman

Trichy SP Varunkumar IPS Twitter Post on Seeman : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல என சீமானுக்கு வருண்குமார் ஐபிஎஸ் பதில் அளித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்  நாம் தமிழர் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சென்ற சாட்டை துரைமுருகன் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் குறித்து அவதூறாக பேசினார். முதல்வரை கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார். 

 இதையடுத்து கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் ஜாமினில் விடுதலையானார் ஆனால் அதே சமயம் அவரின் போனில் இருந்து சீமான் பேசியதாக பல ஆடியோக்கள் வெளியாகின. சமீபத்தில் வெளியான ஆடியோ ஒன்றில்  காளியம்மாள் எல்லாம் எனக்கு ஒண்ணுமே இல்லை. அவள் எல்லாம் வெறும் பிசிறு அவ்வளவுதான். இப்போது வந்துவிட்டு ஆடிக்கொண்டு இருக்கிறாள். வளர விட கூடாது என்று சீமான் பேசுவது போன்ற ஆடியோ வெளியானது.

இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதை சீமான் பேசவில்லை என்று கூறி மறுத்தனர். இது ஏஐ என்றும் கூட விளக்கம் கொடுத்தனர். ஏஐ வைத்து இப்படி எல்லாம் ஆடியோ உருவாக்கலாம் என்றனர். இது சீமானின் பேச்சு கிடையாது என்று கடுமையாக பதில் வாதம் வைத்தனர்.  

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை முருகனின் செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட  சீமானின் பேச்சைத்தான்,  திருச்சி எஸ்பி வருண்குமார் திட்டமிட்டே இந்த பதிவு செய்யப்பட்ட போன் உரையாடல்களை வெளியிட்டு வருவதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக சாட்டை துரைமுருகனும் காணொளி வெளியிட்டார்.

சீமான் ஒரு பக்கம் வருண்குமார் பெயரை குறிப்பிடாமல், ஐபிஎஸ் படித்தால் அதற்குண்டான வேலையை பாருங்கள். திமுக ஐடி விங்க் போல செயல்படாதீர்கள் என்று ஒருமையில் பேசி திட்டி இருந்தார். இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தொண்டர்களும் வருண்குமாரை எல்லை மீறி சமூக வலைத்தளங்களில் திட்டத் தொடங்கவே, இந்த விவகாரம் பூதாகரமானது. 

திருச்சி எஸ்பி வருண்குமார் பெயரைக் குறிப்பிடாமல் ஜாதிய நோக்கத்துடன் அவர் செயல்படுவதாகவும், பிச்சையில் கிடைத்த பதவியை வைத்துக்கொண்டு செயல்படுவதாகவும் நாம் தமிழர் கட்சி தலைவர்    சீமான் பொதுவெளியில் பகிரங்கமாகவும் விமர்சித்தார்.  இதைத்தொடர்ந்து, சில நாம் தமிழர் கட்சியினர் வருண் குமார் குடும்பம் பற்றியும் மோசமாக பேசினர்.

இதில்தான் திருச்சி எஸ்பி வருண்குமார் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் வைக்கப் பட்டு உள்ளது. அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது பற்றி வருண் குமார் செய்துள்ள போஸ்டில், அரசியலுக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது வீட்டில் உள்ள பெண்களையும், எனது குழந்தைகளையும், எனது குடும்பத்தாரையும் அவதூறு பேசி, மிரட்டல் விடுத்த நபர்களை விடமாட்டேன் என கூறியுள்ளார். 

வருண்குமார் சீமான் விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த நிலையில்,  வருண்குமார் ஐபிஎல் சீமானின் பிச்சையெடுத்து வந்த ஐபிஎஸ் பதவி என்பதற்கு பதில் அளித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  தனது ஐபிஎஸ் பதவி,  திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல   கடினமாக உழைத்து, இரவு பகலாக படித்து, ரத்தம் வேர்வை கண்ணீர் சிந்தி, சொந்த உழைப்பில் வாங்கிய வேலை என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

பெற்றோரின் கருணையால், உரப்புலி குலதெய்வத்தின் அருளால் UPSC CSE 2010ல் All India Rank 3 எடுத்ததை நினைவு கூறுகிறேன் என என காட்டமாக பதில் கொடுத்துள்ளதுடன்,.   உயிரைப் போல் நேசித்து தேர்ந்தெடுத்த காக்கிச் சட்டை மீது உள்ள காதல் என்றும் தொடரும். பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசு வது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், நான் காக்கிச் சட்டையை கழற்றுவது பற்றி யோசிக்கிறேன். நான் காக்கிச் சட்டையில் இருப்பது அவ்வளவு பயமோ? என கேள்வி எழுப்பி உள்ளார். 
காக்கிச் சட்டையை கழற்றி வைத்துவிட்டு வாருங்கள் என சவால் விடுத்த சீமானுக்கு வருண்குமார் ஐபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow