உலகளவில் இன்று பெரும்பாலானோர் பயன்படுத்தும் இயங்குதளமாக கூகுளின் 'ஆண்ட்ராய்டு' திகழ்கிறது. பயனர்களின் வசதிக்கும் பாதுகாப்புக்கும் ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை கூகுள் வழங்கி வருகிறது. இந்நிலையில், பழைய மாடல் போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முடிவுக்கு வரும் பாதுகாப்பு சேவை
ஆண்ட்ராய்டு 12 மற்றும் அதற்கு முந்தைய பழைய பதிப்புகளில் (Android 12 or below) இயங்கி வரும் ஸ்மார்ட்போன்களுக்கு இனிமேல் 'பாதுகாப்பு அப்டேட்கள்' (Security Updates) வழங்கப்படாது என கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சைபர் தாக்குதல் அபாயம்
இந்த அப்டேட்கள் நிறுத்தப்படுவதால், பழைய ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஹேக்கர்கள் மற்றும் சைபர் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் திறன் இந்த போன்களுக்குக் குறையும். எனவே, பயனர்கள் தங்கள் போனில் புதிய பதிப்புக்கான அப்டேட் இருந்தால் உடனடியாக அதைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒருவேளை உங்கள் போனில் புதிய அப்டேட் வசதி இல்லையெனில், பாதுகாப்பைக் கருதி புதிய இயங்குதளம் கொண்ட போனுக்கு மாறுவதே சிறந்தது எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

LIVE 24 X 7