இளைஞர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட KTM 160 Duke பைக், ரூ. 1.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சந்தையில் முக்கிய போட்டியாளரான Yamaha MT-15 V2-ஐ விட சுமார் ரூ. 15,000 விலை அதிகம் என்றாலும், இந்த பைக் கூடுதல் சக்தி மற்றும் சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
Yamaha MT-15 மாடல் 2018 ஆம் ஆண்டு, அதிலேயே Yamaha MT-15 V2 பதிப்பு 2022ம் ஆண்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. TVS Apache RTR 160 4V பைக் மாடல் 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு போட்டியாக 160 சிசி ரேஞ்சில் களமிறங்கியுள்ள KTM 160 Duke பைக்கின் அம்சங்கள் பின்வருமாறு-
எஞ்சின் விவரங்கள்:
எஞ்சின்: இந்த பைக்கில் 164.2cc, லிக்விட்-கூல்டு எஞ்சின் உள்ளது. இது KTM 200 Duke-ன் எஞ்சினின் சற்றே குறைக்கப்பட்ட (bored-down) பதிப்பாகும்.
பவர்: இந்த எஞ்சின் 9,500 rpm-ல் 18.74bhp பவர் திறனையும், 7,500rpm-ல் 15.5Nm டார்க் திறனையும் வழங்குகிறது. (பவர்- அதிக வேகத்தை உருவாக்கும் திறன், டார்க்- வண்டியை உடனடியாக இயக்கும் திறன்) பவர் மற்றும் டார்க் இரண்டு அம்சங்களிலும் Yamaha, Apache மாடல்களை விட KTM சிறந்து விளங்குகிறது.
கியர்பாக்ஸ்: இது ஆறு-ஸ்பீடு கியர்பாக்ஸுடன், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் அம்சத்தையும் கொண்டுள்ளது. (Yamaha MT-15 V2-ல் 6 ஸ்பீடு கியர், TVS Apache RTR 160 4V-ல் 5 ஸ்பீடு கியர் உள்ளது)

முக்கிய அம்சங்கள்:
எரிபொருள் டேங்க்: மொத்த எரிபொருள் டேங்கின் மொத்த கொள்ளளவு 10.1 லிட்டர். TVS Apache RTR 160 4V- மாடல் பைக்கில் 12 லிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
பைக்கின் எடை: தற்போது அறிமுகமாகியுள்ள KTM 160 Duke பைக்கின் மொத்த எடை 147 கிலோ. (TVS Apache RTR 160 4V- சுமார் 146 கிலோ, Yamaha MT-15 V2- சுமார் 138 கிலோ)
பிரேக்கிங்: முன்பக்கத்தில் 320mm டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் 230mm டிஸ்க் பிரேக்கும் உள்ளது. டூயல்-சேனல் ABS (Anti-lock Braking System) உள்ளது.
இணைப்பு: KTM Connect App வழியாக புளூடூத் இணைப்பு, navigation, அழைப்பு (call) மற்றும் இசை கட்டுப்பாடு (music control) போன்ற அம்சங்களை அணுக முடியும்.
சேஸ்: KTM 200 Duke பைக் மாடலின் அம்சங்கள் பல அப்படியே KTM 160 Duke பைக் மாடலிலும் இடம் பெற்றுள்ளன. மேற்கொண்டு ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேம், முன்புறத்தில் அப்சைட் டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

நிறங்கள்:
இந்த பைக் மூன்று வண்ணங்களில் தற்போது கிடைக்கிறது.
* எலெக்ட்ரானிக் ஆரஞ்சு (Electronic Orange)
* அட்லாண்டிக் ப்ளூ (Atlantic Blue)
* சில்வர் மெட்டாலிக் மேட் (Silver Metallic Matte)
ஆஸ்திரியாவினை தலைமையிடமாக கொண்ட KTM நிறுவனம் இந்தியாவில் 20 பைக் மாடல்கள் வரை வெளியிட்டுள்ளது. KTM 200 Duke மற்றும் KTM 250 Duke மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு KTM 160 Duke பைக் மாடலுக்கு தற்போதே கிடைத்துவிட்டது. முன்பதிவில் சக்கை போடு போட்டுள்ளது KTM 160 Duke பைக் மாடல். அதற்கு முக்கிய காரணம் அதன் விலை தான் என்றால் மிகையல்ல.