உடல் எடையைக் குறைக்கணுமா? நீங்க உடற்பயிற்சியோடு சில உணவுமுறைகளையும் ஃபாலோபண்ணனும். அப்படியான உணவுகளில் நீங்க தனியா விதைகளை சேர்த்துகொள்ள வேண்டும். தினசரி உணவில் தனியா விதைகள் செய்யும் அற்புதங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
வளர்சிதை மாற்றம்
கொத்துமல்லி விதைகள் செரிமான ஆரோக்கியத்தையும் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரித்து ஆற்றலை அதிகரிக்கும். இதனால் வளர்சிதை மாற்றம் மேம்படும்.
பசியின்மை
கொத்துமல்லி விதைகளில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. இதனால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை தரும். இதனால் உணவு மீதான ஆர்வம் குறையும்.
ஃப்ரீ ரேடிக்கல் வெளியேற்றம்
உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றினாலே வளர்சிதை மாற்றம் மேம்படும். தனியா விதைகள் கரோட்டினாய்டுகள், டெர்பெனாய்டுகள், பாலி அசிட்டிலின்கள் கொண்டவை. இது உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கின்றன.
நச்சு நீக்கம்
கொத்தமல்லி விதையான தனியா நீர் மென்மையான டையூரிக் ஆக செயல்படுகிறது. இது உடலில் இருக்கும் உப்புகள், நீர் மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. கழிவுகள் இல்லாமல் உடல் செரிமானத்தை சீராக்கும்.
இரத்த சர்க்கரை அளவு
தனியா விதைகள் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும் செய்கிறது.இது இன்சுலின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை குறைக்க செய்யும்.
எடை குறைய தனியா விதைகளை எப்படி எடுக்கலாம்?
ஒரு டம்ளர் நீரில், ஒரு டீஸ்பூன் கொத்துமல்லி விதைகளை எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை வடிகட்டி குடிக்கலாம்.
தனியா விதைகளை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். கறி, சாலட், சூப் மற்றும் ஸ்மூத்திகளில் சேர்க்கவும். ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து ஒரு டீஸ்பூன் தனியாவை சேர்த்து வடிகட்டி குடித்துவரவும். தனியா விதைகளுடன் உடல் உழைப்பு, உணவு முறையிலும் கவனம் செலுத்தினால் எடை இழப்பு சாத்தியமாகும்.

LIVE 24 X 7