எலான் மஸ்க் நிறுவனத்தின் Blindsight Device... பெருமைப்படுத்திய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்!

எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் கண்டுபிடித்துள்ள பிலைண்ட் சைட் டிவைஸ் (Blindsight Device) சாதனத்தை “திருப்புமுனை சாதனம்” என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பெருமைப்படுத்தியுள்ளது.

Sep 19, 2024 - 23:36
 0
எலான் மஸ்க் நிறுவனத்தின் Blindsight Device... பெருமைப்படுத்திய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்!
எலான் மஸ்க் நிறுவனத்தின் Blindsight Device...

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த 2016ம் ஆண்டு நியூராலிங்க் என்ற மூளை கணினி இடைமுக நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இது மனிதர்களின் மூளையில் ஒரு சிப்-ஐ பொருத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. அதாவது மாற்றுத்திறனாளிகள் மற்றும் எவ்வித அசைவும் இன்றி படுத்த படுக்கையில் இருக்கும் நோயாளிகள் தங்களது உடலை அசைக்காமல் மூளையின் செயல்பாட்டின் மூலம் கணினி மற்றும் செல்போனை இயக்க முடியுமாம். மூளையில் பொருத்தப்படும் சிப்-ல் இருந்து வெளியாகும் நியூரல் சிக்னல்கள் கணினி, செல்போன் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களில் ட்ரான்ஸ்மிட் ஆகி அதன் மூலம் இயக்கப்படுமாம். 

தற்போது இந்த நியூராலிங் நிறுவனம் மற்றொரு அசாத்தியமான கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வருவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பிலைண்ட் சைட் டிவைஸ் (Blindsight Device) எனப்படும் இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், “Neuralink வழங்கும் Blindsight சாதனம் இரண்டு கண்களையும் பார்வை நரம்புகளையும் இழந்தவர்களையும் பார்க்க வைக்க உதவும். பிறவியிலேயே பார்வை இல்லாதவர்களும் இந்த சாதனம் மூலம் இந்த உலகத்தை தங்களது கண்களால் பார்க்க முடியும். 
எதிர்பார்ப்புகளை சரியாக அமைக்க, பார்வை முதலில் அடாரி கிராபிக்ஸ் போன்ற குறைந்த தெளிவுத்திறனுடன் இருக்கும், ஆனால் இறுதியில் இது இயற்கையான பார்வையை விட சிறந்ததாக இருக்கும் மற்றும் ஜியோர்டி லா ஃபோர்ஜ் போன்ற அகச்சிவப்பு, புற ஊதா அல்லது ரேடார் அலைநீளங்களைக் கூட இந்த சாதனம் பார்க்க உதவுகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: Ind Vs BAN Test: சொந்த மண்ணில் மாஸ் காட்டிய தமிழன்.. அஸ்வின் அதிரடி சதம்

தற்போது இந்த சாதனம் சோதனையில் இருப்பதாகவும் இன்னும் சில ஆண்டுகளில் சோதனைகள் நிறைவடைந்து முழு பயன்பாட்டிற்கு வந்துவிடும் எனவும் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆனது, இந்த பிரத்தியேகக் கண்டுபிடிப்பை “திருப்புமுனை சாதனம்” என்று பெருமைப்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow