பெண்ணின் மார்பகத்தில் முருகன் டாட்டூ.. அல்லோலகல்லோலப்பட்ட சமூக வலைதளம்..
Tattoo Controversy : பெண்ணின் மார்பகத்தில் தமிழ் கடவுளான முருகனின் உருவப்படம் வரையப்பட்டதாக வெளியான புகைப்படத்தை தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
Tattoo Controversy : முருக பக்தர்களை உலகளவில் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வரும் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் முருகன் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இது குறித்து அண்மையில் பேசிய சீமான், திமுகவினருக்கு திடீரென முருகன் கடவுளாக காட்சியளிக்கிறார். ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்போது முருகனுக்கு மாநாடு நடத்துகிறார்கள் என்றும் விமர்சித்திருந்தார். அத்துடன், தங்களுக்கு பயந்தே திமுக முருகன் மாநாட்டை நடத்துகிறது என்று குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசியிருந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “சீமான் புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும் பேசுவார். கட்டுச் சோற்றில் பூசணிக் காயை மறைக்கும் வித்தையை கற்றவர் சீமான். திமுக ஆட்சியை பொறுத்த வரை தமிழ்க் கடவுள் முருகனுக்கு புகழ் சேர்க்கும் வகையில், பல்வேறு கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, முருகன் மாநாட்டை அரசியலோடு தொடர்புபடுத்தி பேச வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த அரசியல் களேபரங்களுக்கு மத்தியில், சமீபத்தில் இளம்பெண் ஒருவர் தமிழ்க் கடவுள் முருகனின் உருவப்படத்தை தனது மார்பகத்தில்(Murugan Tattoo on Breast), டாட்டூவாக வரைந்து கொள்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சும்மா இருப்பார்களா நமது இணையவாசிகள்.. எப்படி கடவுளின் உருவப்படத்தை மார்பகத்தில் வரையலாம் என்று சிலர் கொந்தளித்து கொண்டிருக்கின்றனர்.
மறுபுறம், கடவுளால் படைக்கப்பட்ட இந்த உடலில், கடவுளின் உருவப்படத்தை வரைவதில் எந்த தவறும் இல்லை என்றும், இதே போன்று ஆண்கள் எத்தனையோ ஆண்கள் தங்கள் உடல் பகுதிகளில், கடவுளின் உருவப்படத்தை வரைந்தபொழுது ஏன் யாரும் எந்த கேள்வியை கேட்கவில்லை என்றும் பெண்ணாக இருப்பதினால், ஆணாதிக்க சமூகம் எதிர்வினை ஆற்றி வருவதாகவும் கருத்துகள் உலவி வருகின்றன.
இது குறித்து இணையவாசி ஒருவர், “பெண் மார்பில் முருகர் படம் வரைஞ்சு(Murugan Tattoo Viral) அதை வீடியோ ஷேர் பண்ணினா மட்டும் அசிங்கம், கலாச்சார சீரழிவு-னு கத்துவோம். அதுவே ஒரு ஆண் நெஞ்சில் கடவுள் படம் டாட்டூ போட்டு அதை வீடியோ ஷேர் பண்ணினா மட்டும் எந்த எதிர்ப்பும் வறது இல்லை. இவங்கள பொறுத்த வரை பெண் மார்பு அசிங்கமான பகுதி அங்க கடவுள் படம் கூட வரையக்கூடாது அப்படி வரைஞ்சா கடவுள் கோபப்படுவார். காட்டுற அவளுக்கு பிரச்சினை இல்லை.. உங்களுக்கு எல்லாம் என்னயா பிரச்சினை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், அதே சமயம், பக்தியை காட்டுவதற்காக, கடவுளர்களின் உருவத்தை கண்ட இடங்களில் பச்சை குத்தி அசிங்கப்படுத்த வேண்டாம் என்றும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கடவுள் படங்களை டாட்டூ குத்துவது தான். கடவுளை எங்கே வைத்து வணங்க வேண்டுமோ, அங்கே வைத்துதான் வணங்க வேண்டும் என்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?