நடிப்புக்கு குட்பை சொன்ன விக்ராந்த் மாஸ்சே... முடிவை மாற்ற கோரிக்கை விடுத்த ரசிகர்கள்...!
பாலிவுட் நடிகரான விக்ராந்த் மாஸ்சே (37) நடிப்பில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகரான விக்ராந்த் மாஸ்சே (37) நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். A Death in the Gunj, The Sabarmati Report, Haseen Dillruba, 12th FAIL, Chhapaak உள்ளிட்ட பல படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.
விது வினோத் சோப்ராவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 12th Fail திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்த நிலையில், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. யாரும் எதிர்பாராத வகையில், நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது இவரின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
நடிகர் விக்ராந்த் மாஸ்சே 1987 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்தார். மும்பையில் பள்ளி படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்த அவர் தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். Broken But Beautiful என்ற வெப் தொடரில் நடித்த போது தன்னுடன் நடித்த ஷீதல் தாகூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான வெப் தொடர் ’மிர்சாபூர்’ தொடரில் விக்ராந்த் மாஸ்ஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து 2020இல் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான chhapaak திரைப்படத்தில் நடித்தார்.
விக்ராந்த் மாஸ்சே 2013ம் ஆண்டு சினிமாவில் கால் பதித்த விக்ராந்த் மாஸ்ஸே சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார். 12th Fail திரைப்படம் இவரது திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. விது வினோத் சோப்ராவின் இயக்கத்தில், விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் மேதா ஷங்கர் நடித்த இந்த படம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தியேட்டரில் வெளியானது. ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் ஷர்மாவைப் பற்றிய அனுராக் பதக் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.56 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தற்போது தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கிறார்.
விக்ராந்த் மாஸ்சே தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துவந்த நிலையில், Sector 36, The Sabarmati Report ஆகிய படத்தில் நடித்தார். 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான The Sabarmati Report திரைப்படம் நவம்பர் 15ந் தேதி தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், விக்ராந்த் மாஸ்ஸி இன்ஸ்டாகிராமில், சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவரது இன்ஸ்டகிராம் பதிவில், “கடைசி சில ஆண்டுகள் எனது வாழ்வில் சிறப்பானதாக அமைந்தது. எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. ஒரு கணவர், தந்தை, மற்றும் மகனாக எனது வீட்டை கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வரும் 2025ஆம் ஆண்டு கடைசியாக ஒரு முறை நாம் திரைப்படங்களில் சந்திப்போம். கடைசி 2 படங்கள் மற்றும் பல வருடங்களின் நினைவுகளுடன்” என கூறியுள்ளார்.
View this post on Instagram
அவரது இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விக்ராந்த் மாஸ்சே அவரது முடிவை கைவிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?