பிக்பாஸ் அசோசியேட் இயக்குநர் திடீர் தற்கொலை.. நடந்தது என்ன?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அசோசியேட் இயக்குநர் ஸ்ரீதர்  தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dec 2, 2024 - 10:40
 0
பிக்பாஸ் அசோசியேட் இயக்குநர் திடீர் தற்கொலை.. நடந்தது என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அசோசியேட் இயக்குநர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ் மக்களிடம் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த 6-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. புதிய வீடு, புதிய விதிகள் என பல புதுமைகளை கொண்ட இந்நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். முன்னதாக கடந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பின்னர் ஒரு சில காரணங்களால் அவர் நிகழ்ச்சியிலிருந்து விலகினார். 

'பிக்பாஸ் சீசன் 8’ 50 நாட்களை கடந்த நிலையில் ஆரம்பம் முதலே எந்தவித சுவாரஸ்யமும் இன்றி செல்கிறது. ’இன்னும் நீங்கள் போட்டியை ஆரம்பிக்கவில்லை’ என்று பிக்பாஸே கடுப்பாகும் அளவிற்கு போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.  தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள். இனியாவது போட்டி சூடுபிடிக்கும் என்று எதிர்பார்த்த பார்வையாளர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. 

மேலும், பிக்பாஸ் வீட்டிற்குள் பல தவறுகள் நடப்பதாகவும் அதனை விஜய்சேதுபதி கண்டுகொள்ளவில்லை என்றும் கேள்வி கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மீண்டும் கமல் வரவேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் விஜய் சேதுபதிக்கு இதுதான் முதல் நிகழ்ச்சி என்னதான் அவர் கேட்க நினைத்தாலும் தயாரிப்பு குழு சொல்வதையும் கேட்டாக வேண்டும் என்று விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் அசோசியேட் இயக்குநர் ஸ்ரீதர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு வ.உ.சி நகர் 1-வது தெருவில் வசித்து வரும் ஸ்ரீதர் அவரது வீட்டில் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து புளியந்தோப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow