Actor Nagarjuna Salary for Rajinikanth Coolie Movie : சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ளது. வேட்டையனை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிராம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் கேரக்டர் அப்டேட்ஸ் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. முதலில் செளபின் சாஹிரின் தயாள் கேரக்டரை அறிமுகப்படுத்திய படக்குழு, அடுத்து நாகர்ஜுனாவும் கூலி படத்தில் இணைந்துள்ளதை உறுதி செய்தது.
அதன்படி, நாகர்ஜுனாவின் சைமன் கேரக்டர் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. பல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ரஜினியுடன் இணைந்துள்ளார் நாகர்ஜுனா. அதேநேரம் தனுஷின் குபேரா படத்திலும் நாகர்ஜுனா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கூலி படத்தில் நாகர்ஜுனா டான் கேரக்டரில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதி படம் வெளியானதில் இருந்தே லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் இருந்ததாக நாகர்ஜுனா ட்வீட் செய்திருந்தார். அந்த ஆசை தற்போது ரஜினியின் கூலி படம் மூலம் நிறைவேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கூலி படத்தில் நாகர்ஜுனாவின் கேரக்டருக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம் லோகேஷ். இதனால் தான் இந்த அப்டேட் வெளியானதும் நாகர்ஜுனா ட்வீட் போட்டு நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், கூலி படத்திற்காக நாகர்ஜுனாவிற்கு மிகப் பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். அதன்படி வெளியான தகவல்கள் அடிப்படையில், கூலி படத்திற்காக நாகர்ஜுனாவிற்கு 24 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனையடுத்து நாகர்ஜுனா தான் பெரிய தொகை வாங்கியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க - விஜய்யின் கோட் படத்தில் அஜித்
அதேபோல், மலையாள நடிகர் செளபின் சாஹிருக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதான் செளபின் சாஹிர் கேரியரில் அவர் வாங்கிய அதிக சம்பளம் எனவும் சொல்லப்படுகிறது. நாகர்ஜுனா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகிவிட்ட நிலையில், தொடர்ந்து மேலும் சில அப்டேட்கள் வெளியாகவுள்ளதாம். அதன்படி, சத்யராஜ், பாலிவுட் ஹீரோ அமீர்கான், கன்னட நடிகர் உபேந்திரா ஆகியோரும் கூலி படத்தில் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
கூலி படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதால், இந்தாண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து 2025 கோடை விடுமுறைக்கு கூலி படத்தை வெளியிட படக்குழு பிளான் செய்து வருகிறதாம். இதுபற்றிய அப்டேட்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலியில் பெரும் நட்சத்திரக் கூட்டணியே நடித்து வருவதால், இந்தப் படம் பான் இந்தியா அளவில் ஹிட் அடிக்கும் என படக்குழு நம்பிக்கையுடன் உள்ளது.