GOAT: விஜய்யின் கோட் படத்தில் அஜித்... ஆனா! அது இல்ல... சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு.!

விஜய்யின் கோட் படத்தில் அஜித்தும் இருப்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்கள் மத்தியில் செம ஹைப் கொடுத்துள்ளது.

Aug 31, 2024 - 12:46
 0
GOAT: விஜய்யின் கோட் படத்தில் அஜித்... ஆனா! அது இல்ல... சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு.!
விஜய்யின் கோட் படத்தில் அஜித்?

சென்னை: விஜய் நடித்துள்ள கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, யோகி பாபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மல்டி ஸ்டார்ஸ் மூவியாக உருவாகியுள்ள கோட் படத்துக்கு ரசிகர்களிடம் ரொம்பவே எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என விஜய் ரசிகர்கள் பந்தயம் கட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கோட் குறித்து வெங்கட் பிரபு கொடுத்துள்ள லீட் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பை தாறுமாறாக எகிற வைத்துள்ளது. அதாவது கோட் படத்தில் அஜித்தும் இருப்பதாக சஸ்பென்ஸ் வைத்து பேசியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். 2011ல் வெளியான இந்தப் படம் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கோட் படப்பிடிப்பின் இடையே, அஜர்பைஜானில் இருந்த அஜித்தை நேரில் சந்தித்திருந்தார் வெங்கட் பிரபு. இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.  

கோட் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெறாத நிலையில், வெங்கட் பிரபு ஏன் அஜித்தை சந்திக்க வேண்டும் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். அதேநேரம் கோட் படம் குறித்து அஜித்திடம் கூறியிருந்ததாகவும், அதற்கு மங்காத்தாவை விட கோட் திரைப்படம் 100 மடங்கு அதிகம் இருக்க வேண்டும் என அஜித் சொன்னதாகவும் வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதேபோல், அஜித் மருத்துவமனையில் இருந்த போது விஜய் போனில் நலம் விசாரித்ததாகவும் வெங்கட் பிரபு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - நானும்தான் பாதிக்கப்பட்டேன்... நடிகை விசித்ரா வேதனை!

இதன்மூலம் விஜய்யும் அஜித்தும் எப்போதுமே நண்பர்களாக தான் இருக்கின்றனர். ஆனால் அவர்களது ரசிகர்கள் தான் உண்மையை புரிந்துகொள்ளாமல் அடித்துக்கொள்வதாக பலரும் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில், விஜய்யின் கோட் படத்தில் அஜித்தும் இருப்பதாகக் கூறி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு. இதுபற்றி ஒரு பேட்டியில் பேசியிருந்த அவர், கோட் படத்தில் அஜித்தும் இருக்கிறார், ஆனால் அது எப்படி என சொல்ல முடியாது. வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளாரா அல்லது வேறு எந்த மாதிரி என சொல்லமாட்டேன். கண்டிப்பாக இந்த சீன் தியேட்டர் மொமண்ட்டாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு கொடுத்துள்ள இந்த அப்டேட் தான் இப்போது விஜய், அஜித் ரசிகர்களின் ஹாட் டாபிக்காக உள்ளது. விஜய்யையும் அஜித்தையும் ஒரே திரையில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். ஆனால், கோட் படத்தில் அது நடக்குமா அல்லது வேறு எதாவது சர்ப்ரைஸ் இருக்குமா எனத் தெரியாமல் ரசிகர்கள் உச்சபட்ச எதிர்பார்ப்பில் உள்ளனர். அஜித்தின் மங்காத்தா படத்தில், அர்ஜுன் கேரக்டரில் நானே நடித்திருப்பேன் என விஜய் அப்போது பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow