Me too நானும்தான் பாதிக்கப்பட்டேன்..யாருமே ஆதரவு தரலையே?.. நடிகை விசித்ரா வேதனை

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. தமிழ் நடிகைகளும் பாதிப்பு குறித்து புகார் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட தனது யாரும் ஆதரவு தரவில்லை என்று நடிகை விசித்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

Aug 31, 2024 - 11:52
 0
Me too நானும்தான் பாதிக்கப்பட்டேன்..யாருமே ஆதரவு தரலையே?.. நடிகை விசித்ரா வேதனை
actress vichitra casting couch experience

ஹேமா கமிஷன் ரிப்போர்ட் மலையாள திரை உலகத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள தேசம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களில் பலரும் யாரால் எப்படி பாதிக்கப்பட்டோம் என்று வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பகிரங்கப்படுத்தியும்  யாருமே ஆதரவு தரவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார் விசித்ரா. 

மலையாளத் திரைப்பட சங்கமான அம்மாவின் (AMMA) பொறுப்பிலிருந்து மோகன் லால் ராஜினாமா செய்து விட்டார். முகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீ டூ குற்றம் சாட்டப்பட்ட நடிகர் முகேஷ் வீட்டுக்கு முன் அவருடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி மகிளா காங்கிரஸார் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.தமிழ்நாட்டிலும் குஷ்பு, ஊர்வசி போன்ற சீனியர் நடிகைகள் இதுகுறித்த தங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்கள். 

தமிழ் திரை உலகத்திலும் மீ டூ புகார்கள் எழத்தொடங்கியுள்ளன. சினிமா மட்டுமல்ல சின்னத்திரையும் நடிகைகளுக்கு பாலியல்ரீதியான தொந்தரவு உள்ளதாக குட்டிபத்மினி உள்ளிட்ட நடிகைகள் புகார் கூறத் தொடங்கியுள்ளனர்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'காஸ்ட்டிங் கவுச்' பற்றி போல்டாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை விசித்ரா. கீழ் மட்டத்துல இருந்து மேல்மட்டம் வரைக்கும் இந்த சிக்கல் இருக்கு என்கிறார் நடிகை விசித்ரா. டச் அப் உமன், அசிஸ்டென்ட் கேமரா விமன், காஸ்ட்யூம் டிசைனர், டான்சர்ஸ், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்னு சினிமாவுல இருக்கிற பெண்கள் பலருடைய நிலைமையும் கிட்டத்தட்ட இதுதான். சீரியல் நடிகைகளோட நிலைமையும் இதுதான்னு தனியா சொல்ல வேண்டிய அவசியமில்லை என்கிறார் விசித்ரா.

யாராவது ஒரு நடிகை இதைபத்தி பேசினாலும், ஆதாரம் காட்டினாலும்கூட காதோட காது வெச்ச மாதிரி அந்த விஷயத்தை அப்படியே அமுக்கிடுவாங்க. எல்லா காலத்துலயும் இந்த ஃபீல்டு இப்படித்தான் இருந்திருக்கு. இதுல, 'பிரச்னை நடந்தப்போவே சொல்ல வேண்டியதுதானே'ன்னு சமாளிக்கப் பார்க்கிறாங்க. தொடர்ந்து நடிக்கணும், குடும்பத்தைப் பார்க்கணும், குடும்ப வாழ்க்கை நிம்மதியா இருக்கணும்னு நினைக்கிற பெண்கள் எப்படி வெளிப்படையா சொல்வாங்க என்று கேட்கிறார் விசித்ரா.

நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், நாங்கள் போலீஸ் கிடையாது என்று கூறியுள்ளார். யாராவது அட்ஜஸ்ட்மெண்ட் என்று கேட்டால் செருப்பால் அடியுங்கள் என்றும் கூறியுள்ளார். உப்மா கம்பெனிகள்தான் இதுபோல பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்பது விஷாலின் கருத்து. ஆனால் விசித்ராவோ சினிமா, சின்னத்திரை என அனைத்திலும் இந்த பாதிப்பு இருப்பதாக கூறியுள்ளார். 

ஆணாதிக்கம் அதிகமா இருக்கிற சினிமா துறையில, ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் இருக்கிற படங்கள்ல நடிக்கிற ஹீரோயின்ஸ் எதுவுமே சொல்ல முடியாது என்கிறார் விசித்ரா. சொன்னாலும் பெரியளவுக்கு எஃபெக்ட் இருக்காது. அவரோட அசிஸ்டென்ட் கிட்ட சொல்லுங்க. இவருதான் அந்த டீமோட ஹெட்னு வேற வேற ஆட்களைக் கைகாட்டுவாங்க. ஆனா, அந்த அப்பாவிப்பொண்ணுங்களுக்கு தீர்வு மட்டும் கிடைக்கவே கிடைக்காது.

சினிமாவுல நடிக்கணும்னு வீட்டை எதிர்த்துக்கிட்டு வந்து நடிக்கிற பெண்களோட நிலைமையெல்லாம் ரொம்ப மோசம். பெரிய டைரக்டரை அறிமுகப்படுத்துறேன், புரொடியூசரை அறிமுகப்படுத்துறேன்னு சொல்லி ஆளாளுக்கு ஏமாத்தி, அவங்க வாழ்க்கையே திசைமாறிப்போன கொடுமையெல்லாம் சினிமா ஃபீல்டுல நடந்திருக்கு. சினிமா ஒரு அருமையான கலை. மக்கள் அதை சாக்கடைன்னு நினைக்கிற அளவுக்கு இந்த காஸ்ட்டிங் கவுச் கொண்டு வந்து விட்டுடுச்சு. நடிகைகளைத் தேவதையா பார்த்தவங்க, இப்போ எப்படிப் பார்க்கிறாங்க, பேசுறாங்க தெரியுமா? என்று வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை விசித்ரா பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது “சினிமாவில் இருக்கும் பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாகவும், அந்த படம் சம்பந்தமான பார்ட்டி ஒன்று நடந்தபோது அதில் கலந்துகொண்ட விசித்ராவை அந்த நடிகர் அறைக்கு அழைத்ததாகவும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி அந்த நடிகருக்கு தன்னுடைய பெயர் கூட தெரியாது, இருந்தாலும் தன்னை அறைக்கு அழைத்ததாகவும் அதற்கு தான் மறுப்பு தெரிவித்த அடுத்த நாளில் இருந்து அவருடைய ரூமிற்க்கு மது அருந்திவிட்டு சிலர் கதவை தட்டி தொந்தரவு கொடுத்ததாகவும் பேசியிருந்தார்.

எனக்கு நடந்த தொந்தரவை பற்றி நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசினேன். ஆனால், ஒரு சிலர் எனக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்படி எனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி. ஆனால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் யாரும் எனக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் “கேரளாவைபோல பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்க  தமிழகத்திலும் கமிட்டி வேண்டும் எனவும் விசித்ரா தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்துல பொறுப்புல இருக்கிற விஷால், கார்த்தி மாதிரி இளைஞர்களாவது இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டணும். 'உங்களைத் தப்பா அப்ரோச் செஞ்சா சங்கத்துல வந்து புகார் கொடுங்க'ன்னு பெண்களுக்கு வெளிப்படையா தைரியம் கொடுக்கணும். அப்படி சொல்ற பெண்களுக்குச் சம்பந்தப்பட்ட ஆண்கள்கிட்ட இருந்து பாதுகாப்பையும் உறுதிப்படுத்தணும் என்கிறார் விசித்ரா. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow