விஜய் உடன் இணைந்து நடிக்க ஆசை - டிராகன் பட நடிகை பேச்சு
நடிகர் விஜய் உடன் இணைந்து நடிக்க ஆசை என்று தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிராகன் பட நடிகை கையாடு லோஹர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் உடன் இணைந்து நடிக்க ஆசை என நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் டிராகன் பட நாயகி கையாடு லோஹர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் 25-ம் ஆண்டு
ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சமீபத்தில் வெளியான டிராகன் படத்தில் நடித்த கதாநாயகி கையாடு லோகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார் .
மேலும் சின்னத்திரை நடிகர்கள் கீர்த்தி, விஜய் , சின்னத்திரை பாடகர்கள் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பிரியா ஜெர்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கூடியிருந்த மாணவ மாணவியர் மத்தியில் பேசிய கையாடு லோகர் தமிழ் சினிமாவில் யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் விஜய் உடன் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார் .
மேலும் நடிகர் சிம்பு சாதாரண நடிகர் இல்லை எனவும், அவருக்கு நடிப்பில் பல பரிமாண முகங்கள் உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் கூடி இருந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் அருகில் நடந்து சென்று அவர்களிடம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் இதனை அடுத்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தினர். மேலும் பாடகர்கள் அர்விந்த் ஸ்ரீனிவாஸ், பிரியா உள்ளிட்டோருடன் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களும் உற்சாகமாக பாடல்களை பாடினர். இதனையடுத்து கூடியிருந்த மாணவ மாணவியர் கோடான கோடி என்ற பாடலுக்கு உற்சாகமடைந்து பாடலுக்கு ஏற்ப நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
What's Your Reaction?






