இது பஞ்சாப் டீமா? அல்லது ஆஸ்திரேலியா டீமா? - கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளது குறித்து நெட்டிசன்கள் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்.

Nov 28, 2024 - 01:04
Nov 28, 2024 - 01:14
 0
இது பஞ்சாப் டீமா? அல்லது ஆஸ்திரேலியா டீமா? - கலாய்க்கும் நெட்டிசன்கள்
ஆஸ்திரேலிய வீரர்களான கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ்

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும் முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பதால், ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஏராளமான இந்திய நட்சத்திர வீரர்கள் மீண்டும் மெகா ஏலத்திற்கு வந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.120 கோடி செலவழிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் நிர்வாகம் ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை தக்க வைக்கலாம் என்று கூறிய நிலையில், மொத்தமுள்ள 10 அணிகளும் தங்களுக்கான சிறந்த வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டனர். 

இந்நிலையில், பஞ்சாப் அணி வெறும் இரண்டு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதிலும், இந்திய வீரர்களான பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷஷாங்க் சிங் என அதிகம் அறியப்படாத 2 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொண்டது.

டெல்லி அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரிக்கி பாண்டிங், அந்த அணியில் இருந்து வெளியேறியதை அடுத்து, பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதனால், ஏலத்தில் நட்சத்திர வீரர்களை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்ததை போலவே, கொல்கத்தா அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்றுகொடுத்த ஷ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுக்க கடுமையாக போட்டி போட்டது. முதல்நாள் ஏலத்தில் [நவ.24] முதல் வீரராக ஷ்ரேயாஷ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 2025 ஏலத்தில் அதிகவிலை கொடுத்து எடுக்கப்பட்ட வீரர்களில் ரிஷப் பண்டுக்கு [ரூ.27 கோடி] அடுத்த இடத்தில் ஷ்ரேயாஸ் தான் உள்ளார்.

அவருக்கு அடுத்ததாக அதிக விலை கொடுத்து ஆவேஷ் கானை ரூ.9.75 கோடிக்கும், ஆகாஷ் தீப்-ஐ ரூ.8 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது. பின்னர், பிரியான்ஷ் ஆர்யா, நெஹல் வதேரா, வியாஷக் விஜய்குமார், யஷ் தாக்குர், ஹர்பிரீத் சிங் போன்ற இந்திய வீரர்களை ஏலத்தில் எடுத்தது.

அதே சமயம் ரிக்கி பாண்டிங் மார்கஸ் ஸ்டொய்னிஸ் [ரூ.11 கோடி], கிளென் மேக்ஸ்வெல் [ரூ.11 கோடி], ஆகியோரை ஏலத்தில் எடுக்க கடும் முயற்சி மேற்கொண்டது. அவர்களை ஆஸ்திரேலிய டி20 தொடக்க ஆட்டக்காரர் ஜோஷ் இங்க்லிஷ், ஆல்ரவுண்டர் ஆரோன் ஹார்டி மற்றும் சேவியர் பார்லெட் ஆகியோரையும் ஏலத்தில் எடுத்தது.

ஆஸ்திரேலிய வீரர்களுக்காக ரிக்கி பாண்டிங் 19.85 கோடி ரூபாயை செலவளித்தது குறிப்பிடத்தது. மொத்தம் 8 வெளிநாட்டு வீரர்கள் ஒரு அணியில் இடம்பெறலாம் என்ற நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஆஸ்திரேலிய வீரர்களை ஏலத்தில் எடுத்தது. மார்கே யான்சன், அமர்துல்லா ஒமர்சாய் மற்றும் லாகி ஃபெர்குஷன் ஆகிய 3 வெளிநாட்டு வீரர்களையும் எடுத்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால், அதிகளவில் ஆஸ்திரேலிய வீரர்களை எடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இது பஞ்சாப் டீமா அல்லது ஆஸ்திரேலிய டீமா என்று சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow