டி20 கிரிக்கெட் தரவரிசையில் சறுக்கிய ஹர்திக் பாண்ட்யா.. சூர்யகுமார் யாதவ் எந்த இடம்?

Hardik Pandya in ICC T20 Cricket Rankings : பந்துவீச்சு தரவரிசையை பொறுத்தவரை முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.

Jul 18, 2024 - 19:39
Jul 19, 2024 - 15:35
 0
டி20 கிரிக்கெட் தரவரிசையில் சறுக்கிய ஹர்திக் பாண்ட்யா.. சூர்யகுமார் யாதவ் எந்த இடம்?
Hardik Pandya

T20 rankings: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 கிரிக்கெட், ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களின் பட்டியலை அடிக்கடி அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில் டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

Hardik Pandya in ICC T20 Cricket Rankings : இந்தியா-ஜிம்பாப்வே டி20 தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 844 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 797 புள்ளிகளுடன் 2ம் இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து வீரர் பில் சால்ட்   797 புள்ளிகளுடன் 3ம் இடத்தையும்,பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 755 புள்ளிகளுடன் 4வது இடத்தையும் பிடித்துள்ளார். பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 746 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளார். மேலும் இந்திய வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6வது இடம், ருதுராஜ் கெய்க்வாட் 8வது இடத்தை அலங்கரித்துள்ளனர்.

பவுலிங் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் 718 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர் அன்ரிச் நோர்ட்ஜே 675 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா  674 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் வீற்றிருக்கின்றனர். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 668 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேஸ்ல்வுட் 662 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

பெளலிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. அக்சர் படேல் 13வது இடத்திலும், குல்தீப் யாதவ் 16வது இடத்திலும், ரவி பிஷ்னோய் 19வது இடத்திலும் இருக்கின்றனர். ஆல்ரவுண்டர் தரவரிசையில் வனிந்து ஹசரங்கா 222 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர்  மார்கஸ் ஸ்டோனிஸ் 211 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா 208 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளார். இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 4 இடங்கள் சரிந்து 201 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow