ஹர்திக் பாண்டியாவின் ஓய்வும், ‘ஸ்கை’யின் கேப்டன் பொறுப்பும்..

Suryakumar Yadav : இந்திய அணி கவுதம் கம்பீரின் ஆக்ரோஷமான அணுகுமுறையில் எவ்வாறு விளையாடப் போகிறது என்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

Jul 17, 2024 - 21:46
Jul 18, 2024 - 10:40
 0
ஹர்திக் பாண்டியாவின் ஓய்வும், ‘ஸ்கை’யின் கேப்டன் பொறுப்பும்..
சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா

இலங்கை உடனான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து, ஹர்திக் பாண்டியா விலகுவதாக தெரிவித்ததை அடுத்து, சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Suryakumar Yadav : நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றி சாம்பியன் பட்டம் பெற்றது. இதன் இறுதிப்போட்டியில், அபாரமாக செயல்பட்ட இந்திய அணி வீரர்கள், தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஜாஸ்பிரிட் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கடைசி 5 ஓவர்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர்.

கோப்பை கைப்பற்றிய கையோடு, ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீர்ந்திர ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதனையடுத்து, இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதன் முதல் போட்டியில் இந்திய வீரர்கள் சொதப்பினாலும், அடுத்தடுத்து நடைபெற்ற 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிபெற்று தொடரை கைப்பற்றினர். இந்த இளம் இந்திய அணிக்கு சுப்மன் கில் தலைமை தாங்கி இருந்தார்.

இந்நிலையில், இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து பெருத்த எதிர்பார்ப்பு நிலவியது.

கவுதம் கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறை ஐபிஎல்-இல் சாம்பியன் பட்டம் பெற்றதும், கடைசியாக நடைபெற்று முடிந்த ஐபிஎல்2024 சீசனில் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டதும் முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், அவரது ஆக்ரோஷமான அணுகுமுறையில் இந்திய அணி எவ்வாறு விளையாடப் போகிறது என்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்நிலையில், டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி இருக்கின்ற வேளையில், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது அனைவரைக்கும் ஆச்சர்யத்தை ஏற்பத்தி இருந்தது.

இதற்கிடையே ஹர்திக் பாண்டியா, ஏன் அணியில் இருந்து விலகினார் என்பது குறித்து தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி படுதோல்வி அடைந்ததோடு, புள்ளிப்பட்டியலிலும் கடைசி இடத்தையே பிடித்தது. அப்போது, மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

மேலும், ஹர்திக் பாண்டியாவை பலரும் கேளிக்கு உள்ளாகி இருந்தனர். உலகக்கோப்பை டி20 போட்டியில் கடைசி ஓவரை சிறப்பாக வீசியிருந்த ஹர்திக் பாண்டியா, போட்டி முடிந்ததும் கண்ணீருடன் உணர்ச்சிப் பெருக்கில் காணப்பட்டார். மேலும், தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அவர் தன் மனைவி நடாஷா மற்றும் மகனுடன் செர்பியா நாட்டுக்குச் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளுடன் நடாஷா பயணமாகி இருப்பதை அவரது இன்ஸ்டா வீடியோ ஒன்று காட்டுகிறது. அதேபோல் நடாஷாவும் அவரது மகனும் செர்பியா செல்வதற்காக விமான நிலையத்திற்குச் சென்ற காட்சி மற்றொரு பயனரின் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow