Guerrilla 450: ராயல் என்ஃபீல்டு-வின் அடுத்த சம்பவம்... களமிறங்கும் Guerrilla 450... என்ன ஸ்பெஷல்..?

பாரம்பரியமான மோட்டார் சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, தனது புதிய பைக் மாடலை களமிறக்கியுள்ளது. அட்டகாசமான டிசைனிங், கவர்ந்திழுக்கும் மாடல், கண்களை பறிக்கும் கலர்ஃபுல் காம்போவில் சந்தைக்கு வரும் ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் குறித்த முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

Jul 18, 2024 - 19:02
Jul 19, 2024 - 15:35
 0
Guerrilla 450: ராயல் என்ஃபீல்டு-வின் அடுத்த சம்பவம்... களமிறங்கும் Guerrilla 450... என்ன ஸ்பெஷல்..?
Royal Enfield Guerrilla 450 review

சென்னை: இந்திய மோட்டார் வாகன சந்தையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. புல்லட் வகை பைக் என்றாலே ராயல் என்ஃபீல்டு தான் இப்போதும் டான் ஆக வலம் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக புதிய வகை மாடல்களை களமிறக்கும் ராயல் என்ஃபீல்டு, தற்போது மற்றுமொரு சம்பவம் செய்துள்ளது. அதன்படி கொரில்லா 450 என்ற புதிய மாடலை சந்தையில் களமிறக்கியுள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சக்சஸ்ஃபுல் மாடலான ஹிமாலயன், இளைஞர்களின் ட்ரீம் பைக்காக உள்ளது. அதனால் அதே வெர்ஷனில் கொரில்லா 450 பைக்கை உருவாக்கியுள்ளது ராயல் என்ஃபீல்டு.

மூன்று வேரியண்ட்களில் சந்தையில் அறிமுகமாகும் கொரில்லா 450 பைக்கின் ஆரம்ப விலை, எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் 2.39 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில், மிட் வேரியண்ட் ரகங்களில் Harley-Davidson X440, Triumph Speed 400, Husqvarna Svartpilen 401, and Hero Mavrick 440 ஆகிய மாடல்களுக்கு வரவேற்பு உள்ளது. அதனால் இந்த மாடல்களுக்குப் போட்டியாக கொரில்லா 450 பைக்கை ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ஷெர்பா 450 சிசி இன்ஜினில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் அறிமுகப்படுத்தப்பட்ட கொரில்லா 450 பைக், இந்தியாவில் உள்ள ராயல் என்ஃபீல்டு ஷோ ரூம்களை விரைவில் அலங்கரிக்கவுள்ளன. இதனால் இந்த மாடல்களுக்கான புக்கிங்கும் ஆரம்பமாகியுள்ளன.

அனலாக், டாஷ், ஃப்ளாஷ் என்ற மூன்ற வகைகளில் கிடைக்கும் கொரில்லா 450 மாடல் பைக்கின் விலை முறையே ரூ.2.39 லட்சம், ரூ.2.49 லட்சம், ரூ.2.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) அடிப்படையில் கிடைக்கிறது. கொரில்லா 450 மாடல் பைக் ரெட்ரோ ஸ்டைலில் கலர்ஃபுல்லாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ரவுண்ட் ஹெட் லைட், ஸ்லீக் teardrop-shaped fuel tank என செம ஸ்டைலிஷாக உருவாக்கப்பட்டுள்ளது. பின் பகுதியில் வால் போல நீண்டுள்ளது, 140 மிமீ பயணத்துடன் கூடிய 43 மிமீ தொலைநோக்கி முன் போர்க்குகள், 150 மிமீ பயணத்துடன் பின்புற மோனோ-ஷாக் அமைப்பு ஆகியவையும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 

மூன்று மாடல்களிலும் மொத்தம் ஐந்து கலர்களில் கொரில்லா 450 விற்பனைக்கு வருகிறது. அனலாக் வேரியண்டில் ஸ்மோக் பிளேயா பிளாக், டாஷ் வேரியண்டில் ப்ளேயா பிளாக், கோல்ட் டிப்), ஃப்ளாஷ் வேரியண்டில் மஞ்சள் ரிப்பன், பிராவா ப்ளூ என கலர்ஃபுல் காம்போவில் அறிமுகமாகியுள்ளன. மேலும் 17 இன்ச் அலாய் வீல், 270MM டிஸ்க் பிரேக் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. 2090 மில்லி மீட்டர் நீளம், 833 மில்லி மீட்டர் அகலம், 1125 மில்லி மீட்டர் உயரம் என காம்பெக்ட்டாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த பைக்கின் மொத்த எடை 186 கிலோ என்பதும் குறிப்பிடத்தக்கது. TFT Display, ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி, கூகுள் பேப், ஜிபிஎஸ் நேவிகேஷன், யூஎஸ்பி சி டைப் சார்ஜர், ABS போன்ற பல அம்சங்களும் கொட்டிக் கிடக்கின்றன.

452 cc சிங்கிள் சிலிண்டர், DOHC என்ஜின் கொண்ட இந்த மாடல் 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் சந்தைக்கு வருகிறது. பைக் ரைடர் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் மாடலாக கொரில்லா 450 பைக் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் கொரில்லா 450 மாடல் பைக், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow