மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இன்ஸ்டாகிரம் பிரபலம் ஆன்வி கம்தார் ரீல்ஸ் செய்ய முயன்றபோது 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பலியாகி உள்ளார்.
Aanvi Kamdar Died : மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஆன்வி கம்தார், ரீல்ஸ் வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் பிரபலம் அடைந்தவர் ஆவார். மேலும், அவர், பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டெலாய்ட் நிறுவனத்தில், சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்-ஆகவும் பணி புரிந்து வருகிறார்.
ஆன்வி கம்தாரை சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில், 2 லட்சத்து 56ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வந்தனர். அவர் தனது இன்ஸ்டாகிராமில், பெரும்பாலும் மழைக்கால சுற்றுலா மற்றும் பயண அனுபவங்களை முன்னிலைப்படுத்தி பதிவிட்டு வந்தார். இவரது இந்த பதிவுகள் மூலம் மிகவும் பிரபலமான நபராகவும் மாறிப்போனார்.
ஆடம்பர கண்டுபிடிப்புகள், கஃபேக்கள், பயணத்திட்டங்கள் மற்றும் குறிப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஆன்வி கம்தாரின் இன்ஸ்டாகிராம் பயோவில் "பயண டிடெக்டிவ்" என்று தன்னை தானே விவரித்துள்ளார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள கும்பே நீர்வீழ்ச்சிக்கு தனது நண்பர்கள் 7 பேருடன் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது, ஆன்வி கம்தார் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது சுமார் 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். சுமார் 6 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்புப்படையினர் அவரை மீட்டனர். ஆனாலும், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில், ஆன்வி கம்தார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மீட்புக்குழுவைச் சேர்ந்த காவல் அதிகாரிக் ஒருவர் கூறுகையில், "ஆன்வி கம்தார் 300 அடி பள்ளத்தாக்கில் கடினமான, வழுக்கும் பாறைகளின் மீது விழுந்தார். முதலில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கயிற்றில் இணைக்கப்பட்ட ஸ்ட்ரெச்சரைப் பயன்படுத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, அவர் மீட்கப்பட்டர். மலையிலிருந்து கீழே இறங்கும் பணியில் ஆறு மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும், 50 பேர் மலையின் மேல் இருந்து எங்களுக்கு உதவினர்" என்று தெரிவித்தார்.
A young woman, while trying to make a video (Reel), accidentally pressed the accelerator in reverse gear, causing the car to fall into a ditch, resulting in her death.
— Smriti Sharma (@SmritiSharma_) June 18, 2024
Location- Chhatrapati Sambhaji Nagar, Maharashtra. pic.twitter.com/B5T8m2FvaS