நடிகை சமந்தாவின் தந்தை மறைவு.. “Until we meet again dad” என இன்ஸ்டாவில் உருக்கம்...!

நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இதனை Until We meet again Dad என சமந்தா தனது இன்ஸ்டகிராம் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

Nov 30, 2024 - 06:36
 0
நடிகை சமந்தாவின் தந்தை மறைவு.. “Until we meet again dad” என இன்ஸ்டாவில் உருக்கம்...!
நடிகை சமந்தாவின் தந்தை மறைவு

நடிகை சமந்தா தனது தந்தையின் மரணம் குறித்து நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த நிலையில், அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். சமந்தா தனது ஸ்டோரியில், தந்தை ஜோசப் பிரபுவின் மறைவுச் செய்தியை Until We meet again Dad என சமந்தா தனது இன்ஸ்டகிராம் உருக்கமாக  பகிர்ந்துள்ளார். 

சென்னை பல்லாவரத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை சமந்தா, சென்னை பெண் என்று தன்னை பல இடங்களில் அடையாளப்படுத்திக்கொண்டார். நடிகை சமந்தா கடந்த சில வருடமாக தனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். 

திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த நிலையில், தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். சமந்தாவின் முதல் கணவர் நாக சைதன்யா 2-வது திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது. இதனால் நடிகை சமந்தா பாதிக்கவில்லை என்றாலும், அவரின் தந்தை மறைவு அவருக்கு மேலும், கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.  

தெலுங்கு - ஆங்கிலோ இந்தியனான ஜோசப் பிரபு உடல் நலக்குறைவு காரணமாக இன்று திடீரென உயிரிழந்துள்ளார். நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில், அதை குறிக்கும் விதமாக, 'Until we meet again Dad' என உடைந்த ஹார்ட் எமோஜியுடன் போஸ்ட் ஒன்றை பதிவிட்டு "மீண்டும் நாம் சந்திக்கும் வரை என்னுடைய இதயம் உடைந்திருக்கும் அப்பா" என மனமுடைந்து நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார்.  

சமந்தாவின் இன்ஸ்டா ஸ்டோரியை பகிர்ந்த அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், சினிமா பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு  உயிரிழந்த முழுமையான காரணம் இதுவரை வெளியாகத நிலையில், சமந்தா தனது தந்தை மரணம் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow